Viral Photo: விந்தையான வகையில் பெரிதாகும் பெண்ணின் கர்ப்ப கால வயிறு..!!!

கர்ப்ப காலத்தில், கருவில் உள்ள குழந்தை உருண்டு திரண்டு வளரும்போது இடுப்புக் கூட்டுக்கு மேல் வயிறு பெரிதாக ஆரம்பிக்கிறது. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 26, 2022, 02:37 PM IST
  • டென்மார்க்கில் வசிக்கும் பெண்ணின் புகைப்படம் வைரலாகி வருகிறது
  • ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகளைப் பெற்றெடுத்த பெண்
  • சிசேரியன் மூலம் பிரசவம்.
Viral Photo: விந்தையான வகையில் பெரிதாகும் பெண்ணின் கர்ப்ப கால வயிறு..!!!  title=

கர்ப்ப காலத்தில், கருவில் உள்ள குழந்தை உருண்டு திரண்டு வளரும்போது இடுப்புக் கூட்டுக்கு மேல் வயிறு பெரிதாக ஆரம்பிக்கிறது. ஆனால், டென்மார்க்கில் வசிக்கும் பெண், கர்ப்ப வயிறு பெரிதாகும் விதத்தை பார்த்து அனைவரும், அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்துள்ளனர். 

கர்ப்பிணிப் பெண்ணின் வயிறு பொதுவாக மேல்நோக்கி மற்றும் கீழ்நோக்கி பெரிதாகும். ஆனால் மைக்கேலாவின் விஷயத்தில் அது நீளவாக்கில் பெரிதாக உள்ளது. அதனால்தான் இது எப்படி சாத்தியம் என்ற கேள்வியும் மக்களிடம் எழுந்துள்ளது. இருப்பினும், இந்தக் கேள்விகளுக்கான பதில்களைக் கண்டுபிடிப்பதில் மைக்கேலா ஆர்வம் காட்டவில்லை. அவர்  இது குறித்து கூறுகையில், 'நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன், எனது குடும்பம் பெரிதாகிறது. நான் மூன்று அழகான குழந்தைகளைப் பெற்றெடுத்தேன்’ என பதிவிட்டுள்ளார்.

அந்தப் பெண் உண்மையிலேயே கர்ப்பமாக இருக்கிறாளா அல்லது வேறு ஏதாவது காரணத்தால் வயிறு இப்படி ஆகிவிட்டதா என்பது அவர்களுக்குப் புரியவில்லை. அந்த பெண் தான் கர்ப்ப இருப்பதாக தனது படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

ALSO READ | Puzzle: உங்களுக்கு ‘கழுகு’ பார்வை உள்ளதா; படத்தில் எத்தனை ‘யானைகள்’ உள்ளன?

பொதுவாக ஒவ்வொரு கர்ப்பிணிப் பெண்ணின் கர்ப்ப கால வயிறும் சற்று வித்தியாசமாக இருக்கும், ஆனால் டென்மார்க்கில் வசிக்கும் ஒரு பெண்ணின் வயிற்றின் வடிவத்தை பார்த்து, பலர்  அதிர்ச்சியடைந்துள்ளனர்.  மக்களின் கசந்தேகத்திற்கு பதிலளித்த மைக்கேலா மேயர்-மோர்சி தான் ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகளை பெற்றெடுத்ததாக குறிப்பிட்டுள்ளார்.

'டெய்லி ஸ்டார்'  பத்திரிக்கையில் வெளியான அறிக்கையில், மைக்கேலா மேயர்-மோர்சி சிசேரியன் மூலம் மூன்று குழந்தைகளைப் பெற்றெடுத்தார் என்றும் அவரது கர்ப்பம் 35 வார கர்ப்பமாக இருந்தது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராமில் 260,000 பாலோயர்களைக் கொண்ட மைக்கேலா, தனது கர்ப்ப பயணத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். அவர் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

மைக்கேலா டெலிவரிக்கு முந்தைய வீடியோவையும் பகிர்ந்துள்ளார், அதற்கு கொடுத்த தலைப்பில், 'நாளை காலை எங்கள் குடும்ப உறுப்பினர்கள் ஏழாக அதிகரிப்பார்கள்' என்று எழுதினார். இவர் ஏற்கனவே இரண்டு குழந்தைகளுக்கு தாய் என்பது குறிப்பிடத்தக்கது. மைக்கேலாவின் இந்த வீடியோவும் டிக்டாக்கில் வைரலாகி வருகிறது.

ALSO READ | Watch Video: Burj Khalifa உச்சியில் ஒரு பிரம்மிக்க வைக்கும் விளம்பரம்..!!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News