எங்கள் மீது போர் தொடுத்தால் இந்தியாவுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும்: இம்ரான்கான்
பேச்சு வார்த்தை மூலம் தான் பிரச்சனைக்கு தீர்வு காண முடியும். போரினால் அல்ல. அதையும் மீறி இந்தியா எங்கள் மீது போர் தொடுக்க நினைத்தால் நாங்கள் பதிலடி கொடுப்போம் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார்.
பேச்சு வார்த்தை மூலம் தான் பிரச்சனைக்கு தீர்வு காண முடியும். போரினால் அல்ல. அதையும் மீறி இந்தியா எங்கள் மீது போர் தொடுக்க நினைத்தால் நாங்கள் பதிலடி கொடுப்போம் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார்.
புல்வாமா தாக்குதலை அடுத்து நாடு முழுவதும் பாகிஸ்தானுக்கு எதிராக கோஷங்கள் மற்றும் கண்டனங்கள் எழுந்துள்ளது. புல்வாமாவில் ஏற்பட்ட கொடூரமான தாக்குதலை நடத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாகிஸ்தான் மீது போர் தொடுக்க வேண்டும் எனவும் நாட்டு மக்கள் கோரி வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று உள்ளது.
தாக்குதல் நடந்து ஐந்து நாட்கள் முடிந்த நிலையில், இன்று தொலைக்காட்சி மூலம் உரையாற்றிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உரையாற்றினார். அப்பொழுது அவர், எந்தவித ஆதாரமும் இல்லாமல் எங்கள் மீது இந்திய அரசு குற்றம் சாட்டுகிறது. இந்திய அரசு தகுந்த சாட்சியங்களை அளித்தால் தக்க நடவடிக்கையை மேற்கொள்வோம். புல்வாமா தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. புல்வாமா தாக்குதலால் பாகிஸ்தானுக்கு என்ன பயன்? வன்முறையில் ஈடுபடக்கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். பாகிஸ்தான் மண்ணில் இருந்து யாரும் வன்முறையை பரப்புவது இல்லை. அப்படி யாராவது வன்முறையை தூண்டினார் என்ற ஆதாரத்தை இந்திய அரசு அளித்தால், அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இரு நாடுகளும் பேச்சு வார்த்தை மூலம் தான் பிரச்சனைக்கு தீர்வு காண முடியும். போரினால் அல்ல. அதையும் மீறி இந்தியா எங்கள் மீது போர் தொடுக்க நினைத்தால் நாங்கள் பதிலடி கொடுப்போம். போரை தொடங்குவது எனபது மக்களின் கைகளில் தான் உள்ளது. போரினால் ஏற்படும் விளைவுகள் எந்தவித பாதிப்பை ஏற்படுத்தும் என்பது கடவுளுக்கு தான் தெரியும் எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் பாக்கித்தானின் 19வது பிரதமராக இம்ரான்கான் பதவியேற்றார். இவர் பாக்கித்தான் தெஹரீக்-எ-இன்சாஃப் எனும் அரசியல் கட்சியின் தலைவராக உள்ளார். இவர் ஒரு கிரிக்கெட் வீரர் ஆவார். இவர் தலைமையில் தான் பாகிஸ்தான் அணி உலக கோப்பையை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.