பாகிஸ்தானுக்கு பெரும் அடியாக, ஐக்கிய நாடுகள் சபை (United Nations) வியாழக்கிழமை பாகிஸ்தானை (Pakistan) தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான TTP எனப்படும் தெஹ்ரிக்-இ தாலிபானின் (Tehrik-e-Taliban) பாகிஸ்தான் தலைவர் முப்தி நூர் வாலி மெஹ்சுட்டை (Mufti Noor Wali Mehsud) உலக பயங்கரவாதியாக அறிவித்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஐ.நா-வின் பாதுகாப்பு கவுன்சில் (UN Security Council) தனது ISIL மற்றும் அல்கொய்தா (Al-Qaeda) தடைகள் பட்டியலில் மெஹ்சுட்டைச் சேர்த்தது. அல்-கொய்தாவுடன் தொடர்புடைய அமைப்புகளுக்கு ஆதரவாகவும், சேர்ந்தும், செயல்பட்டு அவர்களுக்கு நிதியுதவி அளித்து, திட்டமிடல், செயல்பாட்டு வசதி செய்து கொடுத்தல் ஆகிய உதவிகளையும் செய்வதாகவும் ஐ.நா குற்றம் சாட்டியுள்ளது.


ஐ.நா-வின் இந்த முடிவை வரவேற்ற அமெரிக்கா, பாகிஸ்தானில் நடந்துள்ள பல பயங்கரவாத தாக்குதல்களுக்கு டி.டி.பி தான் காரணம் என்று கூறியுள்ளது. செப்டம்பர் 2019 இல் அமெரிக்கா நூர் வாலியை ஒரு பயங்கரவாதியாக அறிவித்தது. டி.டி.பி முன்னர் அமெரிக்க வெளியுறவுத் துறையால் உலகளாவிய பயங்கரவாத இயக்கமாக அறிவிக்கப்பட்டிருந்தது.


ALSO READ: இரண்டாவது முறையாக சட்ட உதவியை பெற்றார் Kulbhushan Jadhav ..!!!


அமெரிக்க வெளியுறவுத்துறையின் கூற்றுப்படி, நூர் வாலியின் தலைமையின் கீழ், பாகிஸ்தான் முழுவதும் பல பயங்கரவாத தாக்குதல்களுக்கு TTP பொறுப்பேற்றுள்ளது.


லஷ்கர்-இ-தைபா (Lashkar-e-Taiba) மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது (Jaish-e-Mohammed) போன்ற பயங்கரவாத அமைப்புகளை ஆதரிப்பதற்காக உலக நாடுகள் பலமுறை பாகிஸ்தானை குற்றம் சாட்டியுள்ள நிலையில், இந்த செய்தி பாகிஸ்தானுக்கு மற்றொரு அடியாக வந்துள்ளது.


கடந்த ஆண்டு, ஐ.நா, ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மசூத் அசாரை (Masood Azhar) உலகளாவிய பயங்கரவாதியாக அறிவித்தது.


மசூத் அசார் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட வேண்டும் என்பதில் இந்தியா குறியாக இருந்தது. இதை நடக்க விடாமல் தடுக்க பாகிஸ்தான் சீனா உள்ளிட்ட சில நாடுகள் கடும் முயற்சி செய்தன. எனினும் இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளின் முயற்சியால் இது சாத்தியமானது என்பது குறிப்பிடத்தக்கது.


ALSO READ: லிபியாவில் தாக்குதல், பதட்டத்தில் பாகிஸ்தான்: காரணம் இந்தியாவா?