இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் மிக மோசமான நிலைக்கு சென்று கொண்டு இருக்கிறது. 2022 ஆம் ஆண்டில் வெள்ளம் மற்றும் ரஷ்ய-உக்ரைன் போரால் சீர்குலைந்த விநியோக சங்கிலி என நிலைமையை மோசமாக்கியுள்ளது. இந்த இரண்டு காரணிகளும் பாகிஸ்தானின் பிச்சனைகளை அதிகரித்துள்ளன. அதே நேரத்தில் ஸ்திரமற்ற அரசியல் அரசாங்கம் ந்ந்த ஒரு இணக்கமான நடவடிக்கையையும் எடுக்க முடியாமல் சீர்குலைத்துள்ளது. ஒரே நேரத்தில் பல வகையில் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளை சமாளிக்க பாகிஸ்தான் முயன்று வருகிறது. ஆனால் பாகிஸ்தானின் அரசியலும் மேட்டுக்குடி வர்க்கமும்தான் பாகிஸ்தானின் அவல் நிலைக்கு காரணம். முன்னாள் பிரதமர் இம்ரான் கான் அதிகாரத்தையும் நீதிமன்றத்தையும் எதிர்த்துப் போராடி சிக்கல்களை ஏற்படுத்தி வருகிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

1.1 பில்லியன் டாலர் கடனை எதிர்பார்க்கும் பாகிஸ்தான்


மறுபுறம், பஞ்சாபில் தேர்தலை ஒத்திவைத்த தேர்தல் ஆணையத்தின் முடிவு குறித்து பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளது. பாகிஸ்தானில் இம்ரான் கான் ஆட்சிக்கு வந்ததில் இருந்தே அரசியல் நாடகம் நடந்து வருகிறது. சமீபத்தில், இம்ரான் போலீசாரால் கைது செய்யப்பட்டபோது, பெரிய அளவில் வன்முறை காணப்பட்டது. இந்த அரசியல் நாடகங்களுக்கு மத்தியில், நிதியமைச்சர் இஷாக் தார் சர்வதேச நாணய நிதியத்துடன் ஒரு உடன்பாட்டை எட்ட முடியவில்லை. சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பாகிஸ்தான் 1.1 பில்லியன் டாலர் கடனை எதிர்பார்க்கிறது.


பாகிஸ்தானின் ஏற்றுமதி, இறக்குமதி பாதிப்பு


மார்ச் மாதத்தில் ஏழைகளுக்கு உதவ அரசாங்கம் எரிபொருள் மானியங்களை அறிவித்துள்ளது. ஆனால் அவற்றை செயல்படுத்துவது சிக்கலாக உள்ளது. இவை பாகிஸ்தானின் நிதி மற்றும் எரிசக்தி பற்றாக்குறையை அதிகரிக்கும். 2023 பிப்ரவரியில் பணவீக்கம் 30 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. மார்ச் மாதத்தில் 35 சதவீதத்தை எட்டியது. இது 1974 க்குப் பிறகு ஏற்பட்டுள்ள மிக மோசமன நிலையாகும். உணவுப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது, அதன் கூடுதல் சுமை ஏழைகள் மீது விழுகிறது. இறக்குமதி மீதான வரியால், இறக்குமதியை நம்பியுள்ள முக்கிய தொழில்களும் முடங்கியுள்ளன. இறக்குமதி இல்லாததால் ஏற்றுமதியும் கிட்டத்தட்ட நிறுத்தப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | சமையல் எரிவாயுவுக்கும் ரேஷன்! பொருளாதார நெருக்கடியில் சீரழியும் பாகிஸ்தான் மக்கள்


பாகிஸ்தான் முன் உள்ள பிற சிக்கல்கள்


பாகிஸ்தானில் இருந்து ஆப்கானிஸ்தானுக்கு தொடர்ந்து டாலர்கள் கடத்தப்பட்டு வருகின்றன. அமெரிக்க டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைவதற்கு இதுவும் ஒரு காரணம். எனினும், நிதி அமைச்சர் தார் பதவியேற்பதற்கு முன்பு, டாலருக்கு எதிரான பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு வலுவடையும் என்று கூறியிருந்தார். பாகிஸ்தானின் மோசமான பொருளாதார நிலைமைக்கு மத்தியில், இம்ரான் கான் அரசியல் ரீதியாக அரசாங்கத்தை ஆட்டி படைத்து வருகிறார். அவரது ஆதரவாளர்களில் பெரும்பாலோர் நகர்ப்புற இளைஞர்கள். முக்கியமாக பாகிஸ்தான் ராணுவத்தில் சேர்க்கப்படும் இளம் அதிகாரிகளும், வீரர்களும் இம்ரான் கானுக்கு ஆதரவான நகரங்களைச் சேர்ந்தவர்கள். பஞ்சாப் மற்றும் கைபர் பக்துன்க்வாவில் பெரும்பான்மை அரசு கலைக்கப்பட்டிருப்பது தேசிய அரசியலில் சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் வெளிநாடுகள் மூலம் சந்திக்கும் பிரச்சனைகளை விட உள் நாட்டு பிரச்சனைகளுடன் அதிகம் போராடி வருகிறது.


மேலும் படிக்க |  இறந்த மகனின் விந்தணு மூலம் பிறந்த குழந்தை! பேத்தியை மகளாக்கிக் கொண்ட நெகிழ்ச்சி சம்பவம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ