பாகிஸ்தானின் அடுத்த பிரதமர் யார்... நீடிக்கும் இழுபறி... கோட்டை விட்ட ராணுவம்!
பாகிஸ்தானில் பிப்ரவரி மாதம் எட்டாம் தேதி நடந்த பொது தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அங்கு யார் ஆட்சி அமைப்பார்கள் என்பது குறித்து தொடர்ந்து சஸ்பென்ஸ் நிலவுகிறது.
பாகிஸ்தானில் பிப்ரவரி மாதம் எட்டாம் தேதி நடந்த பொது தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அங்கு யார் ஆட்சி அமைப்பார்கள் என்பது குறித்து தொடர்ந்து சஸ்பென்ஸ் நிலவுகிறது. பாகிஸ்தானில், பொதுவாக ராணுவம் ஆதரிக்கும் நபர் தான் ஆட்சி அமைப்பார். அங்கே ஜனநாயக முறையில் தேர்தல் நடந்தாலும், ராணுவத்தின் ஆசி பெற்றவருக்கே, வெற்றி வாய்ப்புகள் இருக்கும் என்பது ஊரறிந்த ரகசியம்.
ஆனால் இந்த முறை காட்சிகள் மாறி, ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருக்கும், இம்ரான் கானின் பாகிஸ்தான் டெலிஃபி இன்சாப் கட்சி ஆதரவு பெற்ற சுயேச்சைகள் சுபா நூற்றி ஓர் இடங்களில் வெற்றி பெற்றனர். இம்ரான் கானின் கட்சியான பேட்டியை கட்சியை தலை தூக்காமல் இருக்க, அனைத்து தரப்பிலும் எடுக்கப்பட்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்து, இம்ரான் கானின் சுயேச்சை வேட்பாளர்கள் பொதுத் தேர்தலில் அதிகபட்ச இடங்களை வென்றுள்ளனர்.
மறுபுறம், முன்னாள் பிரதமர் நவாஸ்ரீ பின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி, இம்ரான் கான் கட்சிக்கு அடுத்தபடியாக 75 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதே சமயம், பிலால் சர்தார் போட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி 54 இடங்களை கைப்பற்றியது. ஆட்சி அமைக்க 134 எம்பிகளின் ஆதரவு தேவை என்ற நிலையில், இம்ரான் கானின் கட்சியைத் தவிர, பிற கட்சிகள் அனைத்தும் இணைந்து கூட்டணி ஆட்சியை அமைக்க முயற்சித்து வருகின்றன.
தேர்தலில் கட்சிகள் பெற்ற வெற்றி விபரம்
பிடிஐ (இம்ரான் கான்) - 93 இடங்கள்
PML (நவாஸ் ஷரீஃப்) - 75 இடங்கள்
PPP (பிலாவல் பூட்டோ) - 54 இடங்கள்
MQM - 17 இடங்கள்
ஜமியத் உலமா இ இஸ்லாம் - 4 இடங்கள்
தேர்தலுக்கு முன்னதாக, முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீஃபை மீண்டும் பாகிஸ்தானின் பிரதமராக ஆக்கும் நோக்கில் ராணுவம் அவரை பாகிஸ்தானுக்கு அழைத்து வந்தது. ஏனெனில் ராணுவத்தின் கைப்பாவையாக செயல்பட்டு, ராணுவத்தின் கட்டளையை ஏற்று ஆட்சி நடத்துவார் என்பதால், ராணுவம் அவரை பிரதமர் நாற்காலியில் அமர்த்த, அனைத்து வகையிலும் முயற்சி செய்தது. ஆனால் அது நடக்கவில்லை.
ராணுவ ஆட்சிக்கு எதிரான மனநிலையில் இருக்கும் மக்கள், பெருந்திரளாக இம்ரான் கானின் வேட்பாளர்களுக்கு, தங்கள் வாக்குகளை செலுத்தி வெற்றி பெற வைத்து, அக்கட்சியை மிகப்பெரிய கட்சியாக முக்கிய உள்ளனர். வாக்கு எண்ணிக்கை நாளில், வாக்குச்சாவடிகளில் வன்முறை, வாக்கு பெட்டிகளை சேதப்படுத்துதல், வாக்குச்சீட்டுகளை கிழித்து போடுதல் என பல்வேறு வகையான மோசடிகளை செய்த போதிலும், இம்ரான் கான் கட்சி ஆதரவாளர்கள் வெற்றி பெற்று விட்டனர்.
தேர்தல் மோசடிகள் குறித்த பல வீடியோக்கள் சமூக ஊடகங்களிலும் வைரல் ஆகின. இதை எடுத்து, தேர்தலில் தோல்வியடைந்த இம்ரான் கான் கட்சி ஆதரவு சுயேச்சை வேட்பாளர்களில் சிலர், தேர்தல் முடிவுகளை எதிர்த்து லாகூர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதிகாரத்தை பயன்படுத்தி தேர்தல் முடிவை மாற்றியதாகவும் குற்றம் சாட்டினர். ஆனால் எதிர்பார்த்ததைப் போலவே லாகூர் உயர் நீதிமன்றம் இவர்களது மனுக்களை தள்ளுபடி செய்தது.
பாகிஸ்தானில் யாருடைய ஆட்சி அமைக்கப்படும் என்பது குறித்து தற்போது வரை எதுவும் தெளிவாகத் தெரியவில்லை. தேர்தல் முடிந்த 21 நாட்களுக்குள் ஆட்சி அமைக்க வேண்டும் என பாகிஸ்தான் அரசியலமைப்பு சட்டங்கள் கூறுகின்றன. இந்த மூன்று வார கால அவகாசம் பிப்ரவரி 29ம் தேதியுடன் முடிவடையும் நிலையில், யார் ஆட்சியை அமைக்கபோகிறார்கள் என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
மேலும் படிக்க | வீட்டில் எவ்வளவு பணம் வைத்திருக்கலாம்? வருமான வரித்துறை விதிகளை மீறினால் சிக்கல்!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ