பாகிஸ்தானை பொறுத்தவரை, அங்கே தேர்தலில், ராணுவத்திற்கு ஆதரவாக இருப்பவர் மட்டுமே பிரதமராக ஆக முடியும் என்ற நிலை எப்போதும் இருக்கும். கடந்த 1971 ஆம் ஆண்டு முதலில் இதே சூழல்தான். பெயரளவுக்கு தான் அங்கே ஜனநாயகம் உண்டு. தேர்தல், வாக்குப்பதிவு எண்ணிக்கை என அனைத்துமே ராணுவத்தின் கட்டுப்பாட்டில் தான். ராணுவத்தை அனுசரித்து, ராணுவத்தின் கைப்பாவையாக இருப்பவர் மட்டுமே அங்கே பிரதமராக ஆக முடியும். ஆனால் இந்த முறை ராணுவம் கோட்டை விட்டது. இம்ரான் கானை தடுத்து நிறுத்த ராணுவம் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் பலனற்று போயின. இம்ரான் கட்சியைச் சேர்ந்தவர்கள் சுயேச்சைகள் என்று பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இம்ரான் கானின், பாகிஸ்தான் தொகைக்கு இன் சாஃப்ட் கட்சி வெற்றி பெற்ற போதிலும், பாகிஸ்தான் ராணுவம் புதுப்புது உத்திகளை கையாண்டு, இம்ரான் கானை அடக்கி வருகிறது. பாகிஸ்தானின் அரசியல் அமைப்பு சப்தத்தின் படி, தேர்தல் முடிவுகள் வெளியாகி 21 நாட்களுக்குள் ஆட்சி அமைய வேண்டும்.


ராணுவம் மீது பரபரப்பான குற்றச்சாட்டை வைத்துள்ள புஷ்ரா பீபி 


இதற்கிடையில், முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் மனைவியான புஷ்ரா பீபியும் சிறையில் வாடும் நிலையில், அவர் ராணுவம் மீது பரபரப்பான குற்றச்சாட்டை வைத்துள்ளார். அவருக்கு கொடுத்த உணவு மிகவும் காரமாக இருந்தது என்றும், அதில் அமிலம் இருப்பது தான் உணர்ந்ததாகவும், தனது வாய் மற்றும் தொண்டை வெந்து போய்விட்டதாகவும் பரபரப்பான குற்றத்தை சாட்டியுள்ளார். தற்போது வரை உடல் மிக மோசமாக உள்ளது என்றும், ஆறு நாட்களாக அவரால் எதையும் சாப்பிட முடியவில்லை என்றும் கூறப்படுகிறது. 


எதிரிகளின் உறவினர்களை திட்டமிட்டு கொலை செய்யும் ராணுவம்


பாகிஸ்தானில் ராணுவம் தனது எதிரிகளின் உறவினர்களை பலமுறை, திட்டமிட்டு சதி செய்து கொலை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. முகமது அலி ஜின்னாவின் சகோதரி பாத்திமா ஜின்னாவும் மர்மமான முறையில் இறந்தார். இப்போது புஷ்பாவிற்கும் அதே நிலை ஏற்படுமோ என்று பலர் வெளிப்படையாகவே குற்றம் சாட்டி வருகின்றனர்.


தேர்தல் முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டுகள்


ராணுவம் எந்த எல்லைக்கும் செல்லும் என்பதை, அவர்கள் செய்த தேர்தல் முறையீடுகள் மூலம் அறிந்து கொள்ளலாம். தேர்தல் முறைகேடுகள் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பெரிதும் வைரல் ஆகின பிடியை கட்சி ஆதரவாளர்கள் தாங்கள் பல இடங்களில் வேண்டுமென்றே தோற்கடித்ததாக குற்றம் சாட்டினர். தேர்தலில் தோற்ற இம்ரான் கட்சியைச் சேர்ந்த சுயேச்சை வேட்பாளர்கள் பலர் நீதிமன்றத்தை அணுகிய போதும் பலன் ஏதுமில்லை. அவர்கள் மனு நிராகரிக்கப்பட்டது. வாக்குப்பதிவு நாளிலேயே, நாட்டில் மொபைல் நெட்வொர்க் முடக்கப்பட்டது என்பதிலிருந்து, ராணுவத்தின் ஆதிக்கம் எப்படிப்பட்டது என்பதை அறிந்து கொள்ளலாம்.


நவாஸ் ஷரீஃபை மீண்டும் பாகிஸ்தானின் பிரதமராக ஆக்க முயற்சித்த ராணுவம்


தேர்தலுக்கு முன்னதாக, முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீஃபை மீண்டும் பாகிஸ்தானின் பிரதமராக ஆக்கும் நோக்கத்தில் காய்களை நகர்த்திய ராணுவம் அவரை பாகிஸ்தானுக்கு அழைத்து வந்தது. ராணுவத்தின் கைப்பாவையாக செயல்பட்டு, ராணுவத்தின் கட்டளையை ஏற்று ஆட்சி நடத்துவார் என்பதால், ராணுவம் அவரை பிரதமர் நாற்காலியில் அமர்த்த, அனைத்து வகையிலும் முயற்சி செய்தது. ஆனால்  அதன் திட்டம் வெற்றி பெறவில்லை.


மேலும் படிக்க | இந்துகளுக்கு எதிரான கட்சியே பாஜக தான்... ஏன் தெரியுமா? - கனிமொழி சொல்லும் பாயிண்ட்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ