FATF கருப்பு பட்டியலை எண்ணி பாகிஸ்தான் அஞ்சும் காரணம் என்ன..!!!!
ஐரோப்பாவிலும் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருவதை அடுத்து, பயங்கரவாதத்திற்கு நிதி உதவியை, நேரடியாக அல்லது மறைமுமாக அளிப்பது குறித்த விஷயம் தீவிரமாகி வருகிறது.
பாகிஸ்தான் பல்வேறு வகையில் முயற்சி செய்தும் கூட FATF சாம்பல் பட்டியலில் இருந்து வெளியே வர முடியவில்லை. இப்போது கூட அது தடுப்புப்பட்டியலில் சேர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மாதம் அந்த அமைப்பு நடத்திய கூட்டத்தில், பாகிஸ்தான் தன்னை சாம்பல் பட்டியலில் இருந்து வெளியேற்ற வேண்டும் என கூறி பல வாதங்களை முன் வைத்தது, ஆனால் வெற்றி கிடைக்கவில்லை. அதே நேரத்தில், பாகிஸ்தானை கருப்பு பட்டியலில் சேர்க்க வேண்டும் என இந்தியா கோரியது.
ஐரோப்பாவிலும் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருவதை அடுத்து, பயங்கரவாதத்திற்கு நிதி உதவியை, நேரடியாக அல்லது மறைமுமாக அளிப்பது குறித்த விஷயம் தீவிரமாகி வருகிறது. அத்தகைய சூழ்நிலையில், இதைத் தடுக்க FATF என்னும் பயங்கரவாத நிதி கண்காணிப்பு அமைப்பு தனது நடவடிக்கையை தீவிரப்படுத்தி வருகிறது
வேறு விதமாக கூற வேண்டும் என்றால், பயங்கரவாதிகளை 'வளர்க்க' பணம் வழங்குவோர் மீது ஒரு கண் வைத்திருக்கும் ஒரு நிறுவனம் ஆகும். இது பிரெஞ்சு தலைநகரான பாரிஸில், ஜி 7 நாடுகளால் நிறுவப்பட்ட அமைப்பு.
பணமோசடி அல்லது பயங்கரவாத நிதி போன்ற முறைகேடுகளைத் தடுக்க, FATF இல் 27 விதிகள் உள்ளன, இவற்றை ஒவ்வொரு உறுப்பு நாடுகளும் பின்பற்ற வேண்டும். இந்த விதிகளில் ஏதேனும் ஒன்றை மீறும் நாடுகள் சாம்பல் பட்டியலில் வைக்கப்படும். இது ஒரு வகையான எச்சரிக்கை பட்டியல்
நிபந்தனைகளுக்கு இணங்காத நாடுகளுக்கு முதலில் எச்சரிக்கை விடுக்கப்படுகின்றன. சில நாடுகளின் நடவடிக்கைகளை மறுஆய்வு செய்வதன் மூலம் கண்காணிக்கப்படுகின்றன. குறிப்பிட்ட நாடு தனது நடவடிக்கையை மாற்றிக் கொள்ளவில்லை என்றால், அதை கறுப்புப் பட்டியலில் சேர்க்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | மர்மமான வடகொரிய அதிபரை போல், மர்மம் நிறைந்த வட கொரியா ஹோட்டல்..!!!
பாகிஸ்தான் 2018 ஜூன் முதல் சாம்பல் பட்டியலில் உள்ளது. இதற்கு முன்பு, அவர் 2012 முதல் 2015 வரை சாம்பல் பட்டியலில் இருந்தது. 27 நிபந்தனைகளை பூர்த்தி செய்ய பாகிஸ்தானுக்கு 2019 செப்டம்பர் வரை நேரம் இருந்தது. 2020 ஆம் ஆண்டில் பாகிஸ்தான் 21 நிபந்தனைகளை பூர்த்தி செய்துள்ளது. ஆனால் இன்னும் ஆறு நிபந்தனைகளை நிறைவேற்ற வில்லை. இதன் காரணமாக அது சாம்பல் பட்டியலில் தொடர்ந்து உள்ளது.
பாகிஸ்தான் தான் கருப்பு பட்டியலில், அதாவது தடைப்பட்டியலில் சேர்க்கப்பட்டு விடுவோம் என அஞ்சுகிறது. பாகிஸ்தான் தடுப்புப்பட்டியலில் சேர்க்கப்பட்டால் சர்வதேச அளவில் எந்த ஒரு நாடும் பாகிஸ்தானுக்கு நிதி ரீதியாக உதவ முடியாது.
பாகிஸ்தான் தடைப்பட்டியலில் சேர்ந்தால், அதன் ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி அடைந்து பண வீக்க அதிகரிக்கும் . மேலும் நாட்டின் பொருளாதாரம் அகல பாதாளத்திற்கு செல்லும். பாகிஸ்தானின் ரூபாய் மதிப்பை காப்பாற்றும் அளவிற்கு அந்நிய செலாவணி இருப்பு பாகிஸ்தானிடம் இல்லை என்று இம்ரான் கூறுகிறார். பிரதமர் இம்ரான் கூறுவதை வைத்து பார்த்தால் பாகிஸ்தான் தடைப்பட்டியலில் சேர்ந்தால் பணவீக்கம் விண்ணை எட்டும்.
மேலும் படிக்க | தீபாவளியை கொண்டாட தயாராகும் தைவான்.. கடுப்பாகும் சீனா..!!!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR