பாகிஸ்தானில், ஆளும் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) கட்சியின் முக்கிய கூட்டணியான பாகிஸ்தான்  முட்டாடிடா குவாமி இயக்கம் (MQM-P) எதிர்க்கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சியுடன்  உடன்பாடு ஒன்றை எட்டியுள்ளதால்  ​​பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மற்றொரு பின்னடைவைச் சந்தித்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மார்ச் 31 ஆம் தேதி இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு முன்னதாக  இம்ரான் அரசாங்கம் நாடாளுமன்றத்தின் கீழ் சபையில் பெரும்பான்மையை இழந்தது குறிப்பிடத்தக்கது.


புதன்கிழமை அதிகாலை ட்வீட் செய்த PPP தலைவர் பிலாவல் பூட்டோ சர்தாரி, ஒன்றிணைந்த எதிர்க்கட்சி மற்றும் MQM ஒரு ஒப்பந்தத்தை எட்டியுள்ளதாக தெரிவித்துள்ளார்.


மேலும் படிக்க | கடைசி பந்தில் சிக்சர் அடிக்க முயலும் இம்ரான் கான்; தப்பிக்குமா இம்ரானின் நாற்காலி..!!


"ஒருங்கிணைந்த எதிர்க்கட்சி மற்றும் MQM ஒரு உடன்பாட்டை எட்டியுள்ளன. ரப்தா கமிட்டி MQM மற்றும் PPP CEC இந்த ஒப்பந்தத்தை அங்கீகரிக்கும். நாங்கள் நாளை IA செய்தியாளர் சந்திப்பில் ஊடகங்களுடன் விவரங்களை பகிர்ந்து கொள்வோம். வாழ்த்துகள் பாகிஸ்தான்,"  என PPP தலைவர் பிலாவல் பூட்டோ சர்தாரி ட்வீட் செய்துள்ளார்.



மேலும் படிக்க | பாகிஸ்தானில் ஆட்டம் காணும் இம்ரான்கானின் நாற்காலி; விரைவில் ஆட்சி கவிழ்ப்பு?


ஆளும் கூட்டணிக் கட்சியான MQM-P இம்ரான் கான் தலைமையிலான அரசாங்கத்தில் இருந்து பிரிந்து செல்லத் தீர்மானித்த பிறகு, ஒருங்கிணைந்த எதிர்க்கட்சிக்கு இப்போது நாடாளுமன்றத்தில் 177 MNAக்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க | Pakistan: குரானை அவமதித்ததாக இளைஞர் ஒருவர் கல்லால் அடித்து படுகொலை!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR