பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சனிக்கிழமை இராணுவக் தலைவர் ஜெனரல் கமர் ஜாவேத் பாஜ்வா மற்றும் பிற அமைச்சர்களுடன் கட்டுப்பாட்டுக் எல்லையை பார்வையிட்டார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 வது சட்டப்பிரிவு ரத்து செய்யது, அம்மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது மத்திய அரசு. அந்த மாநிலத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதால், கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அரசியல் கட்சி தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். செல்போன், இணையதள சேவைகள் முடக்கப்பட்டன. காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்குபாகிஸ்தான் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றது. 


இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நிலவும் பதட்டங்களுக்கு மத்தியில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வெள்ளிக்கிழமை கட்டுப்பாட்டுக் கோட்டை (LoC) பார்வையிட்டார். அவருடன் ராணுவ தலைமை ஜெனரல் கமர் ஜாவேத் பஜ்வா, பாதுகாப்பு மந்திரி பர்வேஸ் கட்டாக், வெளியுறவு மந்திரி ஷா மஹ்மூத் குரேஷி மற்றும் காஷ்மீர் சிறப்புக் குழுவின் தலைவர் சையத் ஃபக்கர் இமாம் ஆகியோர் கலந்து கொண்டனர்.


பாகிஸ்தானின் பாதுகாப்பு மற்றும் தியாகிகள் தினத்தை முன்னிட்டு இந்த விஜயம் நடந்துள்ளது. அவர்களது வருகையின் போது, கான் "கட்டுப்பாட்டில் உள்ள தற்போதைய நிலைமை குறித்து விளக்கமளித்தார்" என்று இன்டர்-சர்வீசஸ் பப்ளிக் ரிலேஷன்ஸ் (ISPR) தெரிவித்துள்ளது. அவர் துருப்புக்கள் மற்றும் இறந்த வீரர்களின் குடும்பங்களுடன் உரையாடினார்.


பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு-காஷ்மீரில் (Pok) இந்தியா எந்தவொரு இராணுவ நடவடிக்கையையும் மேற்கொண்டால் எந்தவொரு சூழ்நிலையையும் சமாளிக்க தனது நாட்டின் ஆயுதப்படைகள் தயாராக இருப்பதாக சில நாட்களுக்கு முன்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.