சீன தடுப்பூசி போட்டுக்கொண்ட பாகிஸ்தான் ஜனாதிபதிக்கு கொரோனா தொற்று!
சீன தடுப்பூசியின் முதல் அளவை எடுத்துக் கொண்ட பாகிஸ்தான் அதிபர் ஆரிஃப் ஆல்வி கொரோனா நோய்த்தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
சீன தடுப்பூசியின் முதல் அளவை எடுத்துக் கொண்ட பாகிஸ்தான் அதிபர் ஆரிஃப் ஆல்வி கொரோனா நோய்த்தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் (Imran Khan) ஏற்கனவே வைரஸால் பாதிக்கப்பட்டு தனிமையில் உள்ளார். இதற்கிடையில் பாகிஸ்தானில் கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமடைந்து வருகின்றனர்.
உலக நாடுகளில் கொரோனா (Coronavirus) பாதிப்பு வேகமெடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக பாகிஸ்தானில் தொற்று நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை திடீரென அதிகரித்து வருகின்றது. அங்கு தினசரி பாதிப்பு 4000 - 5000 என்ற அளவில் அதிகரித்துள்ளது. மேலும் இதுவரை 659,116 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 14,256 பேர் உயிரிழந்துள்ளனர்.
ALSO READ | பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு கொரோனா தொற்று!
இதனிடையே பாகிஸ்தான் (Pakistan) அதிபர் ஆரிஃப் ஆல்வி மற்றும் அந்நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் பெர்வேஸ் கத்தக் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பாகிஸ்தான் அதிபர் ஆரிஃப் ஆல்வி தானும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள தகவலில், “நான் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளேன். கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இறைவன் கருணை காட்டட்டும்.” என பதிவிட்டுள்ளார். மேலும் நாட்டு மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கும்படியும் அவர் அறிவுறுத்தினார்.
கடந்த மார்ச் 15ம் தேதியன்று தான் அதிபர் ஆரிஃப் ஆல்வி கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் எடுத்துக்கொண்டார். அவருக்கு சீன (China) நாட்டின் தடுப்பூசி போடப்பட்டதாக தெரியவந்துள்ளது. 2வது டோஸ் தடுப்பூசி (Corona vaccine) இன்னும் ஒரு சில நாட்களில் அவருக்கு செலுத்தப்பட இருந்த நிலையில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
ALSO READ | Oxford-AstraZeneca கோவிட் தடுப்பூசிகள் பாதுகாப்பானதா.. எய்ம்ஸ் தலைவர் கூறுவது என்ன..!!!
அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR