புதுடெல்லி: அஸ்ட்ராஜெனெகாவின் கோவிட் -19 தடுப்பூசியை நாடுகள் தொடர்ந்து பயன்படுத்த வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு (WHO) வலியுறுத்தியுள்ள நிலையில், அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம் (AIIMS) தலைவர் ரந்தீப் குலேரியா, பிரிட்டிஷ்-ஸ்வீடிஷ் நிறுவனம் உருவாக்கிய தடுப்பூசி பாதுகாப்பானது தான் என்றும், அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி காரணமாக ரத்த உறைவு ஏதும் இல்லை என கூறியுள்ளார்.
தடுப்பூசி பாதுகாப்பானது என்ற WHO நிலைப்பாட்டை ஆதரித்த, குலேரியா, இந்த தடுப்பூசி ஐரோப்பிய ஒன்றியத்தில் மட்டுமல்ல, இங்கிலாந்து, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும், டென்மார்க் மற்றும் பிற நாடுகளில் கூறப்படுவது போல், ரத்த உறைவு எதுவும் காணப்படவில்லை என தெரிவித்தார்
ALSO READ | COVID-19: கேரளாவிலிருந்து வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கிறது தமிழகம்
இரத்த உறைவு பற்றிய சில அறிக்கைகளுக்குப் பிறகு, பல ஐரோப்பிய நாடுகள் ஆக்ஸ்போர்டு / அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியின் பயன்பாட்டை நிறுத்தி வைத்துள்ளன. இது சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவுடன் இணைந்து இந்தியாவில் தடுப்பூசி தயாரித்து வருகிறது. இருப்பினும், சில நாடுகளில் கூறியுள்ள படி, தடுப்பூசி எடுத்துக் கொண்ட பின், அதன் காரணமாக இரத்தக் ரத்த உறைவு ஏற்படுபவதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று எய்ம்ஸ் மருத்துவர் கூறியுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இங்கிலாந்தில் சுமார் 17 மில்லியன் மக்கள் இப்போது எங்கள் தடுப்பூசி பெற்றுள்ளனர். மேலும் இரத்த உறைவு ஏற்பட்டவர்களின் மிக எண்ணிக்கை குறைவாக உள்ளது என்று அஸ்ட்ராஜெனெகா (AstraZeneca) தலைமை மருத்துவ அதிகாரி ஆன் டெய்லர் தெரிவித்தார். மேலும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, தடுப்பூசி தொடர்பான பாதிப்புகளை நான் விரிவாக, முழுமையாக ஆராய்ந்து வருகிறோம், என்று அவர் கூறினார்.
ALSO READ | கொரோனா ஹாட் ஸ்பாட் ஆகும் மகாராஷ்டிரா; சுமார் 16,000 புதிய தொற்று பாதிப்புகள்
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR