பாகிஸ்தான் நாடு தீவிரவாதிகளுக்கு தொடர்ந்து அடைக்கலம் கொடுத்து வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியதாவது,


கடந்த 15 ஆண்டுகளில் பாகிஸ்தானுக்கு தேவையில்லாமல் 33 பில்லியன் டாலர்கள் நிதி கொடுத்து முட்டாள்தனமானது என்று வருந்துகிறேன். நாங்கள் ஆப்கானிஸ்தானில் தேடும் தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் கொடுத்து வருகிறது. பாகிஸ்தானுக்கு தொடர்ந்து அமெரிக்கா பல உதவிகள் செய்து வருகிறது. இருந்தாலும் அமெரிக்காவை பாகிஸ்தான் வஞ்சிக்கிறது. அமெரிக்க தலைவர்கள் முட்டாள்கள் என்று நினைக்கின்றனர். இனிமேல் பாகிஸ்தானுக்கு எந்த உதவியும் செய்யமாட்டோம் இவ்வாறு அவர் பதிவிட்டு உள்ளார்.


டிரம்ப்பின் இந்த டிவிட்டை தொடர்ந்தது பாகிஸ்தானுக்கான அமெரிக்க தூதருக்கு பாகிஸ்தான் அரசு சம்மன் அனுப்பி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.