பாகிஸ்தானில், மத நிந்தனைக்கு, கடுமையான தண்டனைகள் விதிக்கப்படுகின்றன. பொது இடத்தில், கொடூரமாக தாக்கிக் கொல்லுதல், ஆயுள் தண்டனை, பொதுவில் கல்லால் அடித்து கொல்லுதல், சாட்டையடி போன்ற கொடூரமான தண்டனைகள் கொடுக்கப்படும். அதோடு மட்டுமல்ல அடிப்படைவாத கும்பல்கள்,  பொது இடங்களில் கொலை செய்யும்  கொடூரமாக கொலை செய்யும் பழக்கம் கொண்டவர்கள். மத நிந்தனை செய்தால் என்று இல்லை மத நிந்தனை செய்துவிட்டார் என்று சந்தேகம் வந்தாலே கொலை செய்து விடுவார்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அரபி எழுத்துக்கள் அச்சிடப்பட்ட ஆடை


பாகிஸ்தானின் லாகூரில், பெண்ணின் ஆடையில் அரபு எழுத்துக்கள் எழுதப்பட்டிருந்தது எடுத்து, அதை குர்ஆனில் உள்ள வாசகம் என்று சிலர் கருதி, மத நிந்தனை செய்து விட்டார் என கொடூரமாக தாக்க வந்தனர். நல்ல வேலையாக, அங்கு வந்த பெண் காவலர் ஒருவர், பெண்ணின் உயிரை காப்பாற்றி உள்ளார்.


கொலை செய்ய வேண்டும் என்று திரண்டு வந்த கும்பல்


லாகூரின் தெருக்களில், அரபி எழுத்துக்கள் அச்சிடப்பட்ட ஆடை ஒன்றை அணிந்த பெண்ணை பார்த்த அடிப்படைவாதிகள், அது குர்ஆனில் உள்ள எழுத்துக்கள் தான் எனவும், மத நிந்தனை செய்து விட்ட காரணத்திற்காக அவரை கொலை செய்ய வேண்டும் என்று திரண்டு வந்தனர். அந்தப் பெண் செய்வதறியாது நடுங்கிக்கொண்டே இருந்தார். அப்போது அந்த கும்பலில் இருந்த யாரோ ஒருவர் பெண்ணை காப்பாற்ற காவல் நிலையத்திற்கு தகவல் அனுப்பியுள்ளார்.


மேலும் படிக்க | $500 மில்லியனுக்கும் அதிகமான கடன்! திவாலாகிறாரா அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்?


தைரியமாக நிலைமையை கையாண்ட பெண் அதிகாரி


காவல் நிலையத்திற்கு வந்த தகவலை எடுத்து, பெண் அதிகாரி சம்பவம் நடந்து இடத்திற்கு விரைந்து சென்றார்.. அப்போது அந்தப் பெண்ணை சுற்றி கும்பல் சூழ்ந்து கொண்டிருந்தன. அந்த கும்பலை, விரட்டி அவர்களை தைரியமாக கையாண்டு அந்தப் பெண்ணை காப்பாற்றி விட்டார். பஞ்சாப் முதல்வர் பாராட்டு தெரிவித்துள்ளார். காவல்துறை பெண் அதிகாரி மெஹர் பானு, என்பவரின் வீர தீர செயலை பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணம் முதல்வர் பாராட்டியுள்ளார். அவருக்கு வீரத்திற்கான பதக்கம் கொடுக்கப்பட வேண்டும் என்று காவல்துறையும் பரிந்துரைத்துள்ளது. அடிப்படை வாத கும்பல், பெண்ணை படுகொலை செய்வதிலிருந்து பாதுகாக்க, போராடிய பெண் அதிகாரி, அங்கே சிறு அசம்பாவிதம் நடந்தால் கூட, மிகப் பெரிய கொடூரமான செயலுக்கு வழி வகுத்திருக்கலாம் என்றும், அந்த பெண் அந்த இடத்தை கிளம்பிப் போன பிறகு நான் நிம்மதி பெருமூச்சு விட்டேன் என்றும் கூறினார்.


ஆடையில் இருந்த அரபு எழுத்துக்கள்


ஆடையில் எழுதி இருந்தால் அரபு எழுத்துக்கள் அல்வா என்ற வார்த்தையை எழுத இருந்ததாகவும், அதற்கு அழகானது அல்லது இனிமையானது என்று பொருள் என்றும் கூறினார். அதைக் கூட புரிந்து கொள்ள முடியாமல் உணர்ச்சி வசப்பட்டு, மதன்ந்தனையாக கருதி பெண்ணை தாக்க முயற்சித்தனர்.


மேலும் படிக்க | ஹமாஸ் இஸ்ரேல் போருக்கு மத்தியில், பாகிஸ்தானில் தாக்குதல் நடத்திய ஈரான்! இருவர் பலி 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ