இஸ்லாமாபாத்: அமெரிக்காவின் 45-வது அதிபராக குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்டு டிரம்ப் தேர்வு செய்யப்பட்டார். அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டிரம்ப் இந்தியாவிற்கு ஆதரவாக இருக்கலாம் என்று பாகிஸ்தானியர்கள் கவலையடைந்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த மே மாதம் ஆப்கானிஸ்தான் தலிபான் பயங்கரவாத தலைவன் பாகிஸ்தானில் அமெரிக்க ஏவுகணை தாக்குதலில் கொல்லப்பட்டான், இதனையடுத்து புதியை கொள்கையை கொண்டுவர நேரிட்டது.


இதற்கிடையே இவ்வாண்டு இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவு மிகவும் மோசமான நிலையை சந்தித்து உள்ளது. சமீபத்தில் உரி ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 19 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகள் பாகிஸ்தானிலிருந்து வந்தவர்கள் என்பது இந்தியா தரப்பு குற்றச்சாட்டு. அதிகமான பாகிஸ்தானியர்களை பொருத்த வரையில் டிரம்ப் இஸ்லாமியர்களுக்கு எதிரானவர் அமெரிக்காவில் இஸ்லாமியர்கள் நுழைவிற்கு தடைவிதிக்க முயன்றவர் இந்தியா உடனான வர்த்தம் மேலும் வலுப்பெறும், டிரம்ப் நிர்வாகத்தின் நகர்வு மேலும் புதுடெல்லியை நோக்கியே இருக்கும் என்ற கருத்தையே கொண்டு உள்ளனர்.
 
அமெரிக்க செய்தி நிறுவனத்திற்கு அளித்திருந்த பேட்டியிலும், ஆப்கானிஸ்தானில் 10000 அமெரிக்க ராணுவ வீரர்களை நிறுத்திவைக்க ஆதரவு தெரிவித்திருந்தார். அணுஆயுதம் கொண்டிருக்கும் பாகிஸ்தான் அருகே அமைத்து உள்ளதன் காரணமாக என்று கூறப்பட்டது.


டிரம்ப் வெற்றிப் பெற்றதை தொடர்ந்து பாராட்டு தெரிவித்த பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப் டிரம்புக்கு பாகிஸ்தான் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.


எங்களுடைய வெளியுறவுக் கொள்கையானது தேசிய பாதுகாப்பிலானது, அரசு மாறினாலும் கொள்கையில் மாற்றம் இருக்காது, என்று கராச்சியில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரி உறுதியளித்தார். 


இந்திய பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட வாழ்த்து செய்தியில், இந்திய - அமெரிக்க உறவு புதிய உச்சத்தை எட்டுவதற்காக தங்களுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் இருக்கிறேன். உங்கள் தேர்தல் பிரசாரங்களின்போது, இந்தியாவுடனான உங்கள் நட்புணர்வை வெளிப்படுத்தியதற்காக பாராட்டுத் தெரிவிக்கிறேன் என்றார். பிரதமர் நரேந்திர மோடியின் இந்த பாராட்டிற்கு டிரம்ப் உடனடியாக நன்றி தெரிவித்தார் என்று குறிப்பிடதக்கது.