நமது மூளையின் செயல்பாட்டில் பாதிப்பு ஏதேனும் ஏற்பட்டால், அதனை சரி செய்ய மூலையில் சிப் ஒன்றைப் பொருத்தி தீர்வு காணும் முயற்சி தொடர்பான ஆராய்ச்சிகளை பல ஆண்டுகளாக எலான் மிஸ்கின் யூராலிக் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. உலகின் கோடீஸ்வரர்களில் ஒருவரான எலான் மஸ்கின் நூறாளின் நிறுவனம், நரம்பியல் பாதிப்புகள் காரணமாக, முடங்கியுள்ள உடல் இயக்கத்தை மீட்க மேற்கொள்ளப்பட்ட என்ன பண்ற ஆராய்ச்சியை வெற்றிகரமாக முடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்ட ஒரு நபருக்கு, மூளையில் சிப் பொருத்தி ஆய்வு மேற்கொண்ட நிலையில், மூளையில் சிப் பொருத்தப்பட்ட அந்த நபர், தற்போது குணமடைந்து வருகிறார் என்றும், கம்ப்யூட்டர் மௌஸை கட்டுப்படுத்தும் அளவிற்கு அவரது உடல்நிலை முன்னேறி உள்ளது என்றும் எலான் மாஸ்க் தெரிவித்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எண்ணங்கள் மூலம் கணிணி மவுஸை கட்டுப்படுத்திய நோயாளி


நியூராலிங்கின் மைக்ரோ சிப் என்பது மனித மூளையில் பொருத்தக்கூடிய ஒரு சிறிய கணினி சிப் போன்றது. நமது மூளை உடலைக் கட்டுப்படுத்த சமிக்ஞைகளைப் பயன்படுத்துவதைப் போலவே, நியூராலிங்கின் மூளைச் சிப் நமது எண்ணங்களுக்கும் கம்யூடருக்கும் இடையே ஒரு பாலம் போல் செயல்படுகிறது. நியூராலின்ஸ் நிறுவனம், மூளைக்கும் கம்ப்யூட்டருக்கும் ஒரு இன்டர்பிரைஸ் இணைப்பை உருவாக்கி, அதன் மூலம் எண்ணங்களை செயல்படுத்தும் வகையில், மனிதரின் மூளையில் சிப் ஒன்றைப் பொருத்தியுள்ள நிலையில், அவர் தனது எண்ணங்கள் மூலம் கணிணி மவுஸை கட்டுப்படுத்தினார் என எலான் மாஸ்க் (Elon Musk) தெரிவித்துள்ளார். 


மூளையில் சிப் பொருத்தும் ஆராய்ச்சி பணி


கடந்த 2016 ஆம் ஆண்டு, தொடங்கப்பட்ட, மூளையில் சிப் பொருத்தும் ஆராய்ச்சி பணிகளில், மனிதர்களின் மூலையில் சிப் ஒன்றினைப் பொருத்தி பரிசோதனை செய்வதற்காக அமெரிக்க அரசிடம் அனுமதி பெற்று இருந்தார். அதன் அடிப்படையில், நியூராலயத்தின் ஆராய்ச்சிக்காக தேர்வு செய்யப்பட்ட நபரிடம், பொருத்தப்பட்டு ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. முதலில் குரங்குகளை வைத்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு மனித மூளைக்குள் பொருத்தி பரிசோதனை செய்ய அனுமதி வழங்கப்பட்டது. நியூராலிங் நிறுவனம் இது குறித்து கருத்து தெரிவிக்கையில், மூளைக்குள் பொருத்தப்படும் அந்த சிப் மூளை செயல்பாட்டை தூண்டி விடும் என்றும், இதன் மூலம் ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், மனச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கூட பயன் அடையலாம் என்று கூறப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | AI: பங்குச் சந்தையிலும் பட்டையைக் கிளப்பும் செயற்கை நுண்ணறிவு! ஒரு நாளில் பில்லியனராகலாம்!


மைக்ரோ சிப்பின் பாதுகாப்பு மற்றும் செயல்திறன்


 முடக்கு வாதத்தினால் பாதிக்கப்பட்டவர்கள், கழுத்து காயம் அல்லது அமியோட்ரோபிக் லேட்டரல் ஸ்க்லரோசிஸ் (ALS) காரணமாக முடங்கிப் போயிருக்கும் நோயாளிகள் ஆகியோருக்கு, மூளையில் மைக்ரோ சிப் பொருத்tஹி சோதனை மேற்கொள்ளப்படுகிறது. பாதிக்கபப்ட்ட மக்கள் தங்கள் எண்ணங்களுடன் கணினி கர்சர் அல்லது கீபோர்டைக் கட்டுப்படுத்த, மைக்ரோ சிப் பொருத்த பட்டு, அதன் மூலம் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் பரிசோதிக்கப்பட்டு வருகிறது. ஆராய்ச்சியாளர்கள், ரோபா ஒன்றி உதவியுடன்,  மூளையின் ஒரு பகுதியில் மைக்ரோ சிப்பை அறுவை சிகிச்சை மூலம் வைத்துள்ளனர். இந்த சாதனம் நோயாளிகளின் எண்ணங்களை மட்டுமே பயன்படுத்தி கணினி கர்சர் அல்லது கீபோர்டைக் கட்டுப்படுத்த உதவும்.


எலோன் மஸ்க் மேற்கொள்ளும் ஆராய்ச்சியின் நோக்கம்


நம் மூளையை கணினியுடன் இணைப்பதன் மூலம், நம் மனதை, மூளையை விரிவுபடுத்தி, அதன் எல்லைகளை தாண்டி செயல்திறனை மேம்படுத்த முடியும் என்று எலான் மஸ்க் நம்புகிறார். இது நமது அறிவாற்றலை ஒரு புதிய நிலைக்கு உயர்த்தி கொண்டு செல்ல இது உதவும் என எண்ணுகிறார். பல்வேறு விஷயங்களை விரைவாகக் கற்றுக்கொள்வது, தகவல்களை உடனடியாக பெற்றுக் கொள்வது மற்றும் எண்ணங்களை மட்டுமே பயன்படுத்தி மற்றவர்களுடன் தொடர்புகொள்வது போன்றவற்றை சாதிக்க முடியும் என எண்ணுகிறார் எலான் மஸ்க். நியூராலிங்க் மூலம், எலோன் மஸ்க், இவை அனைத்தும் சாத்தியமாகும் எதிர்காலத்தை கற்பனை செய்கிறார்.


மேலும் படிக்க | பாகிஸ்தான் பொருளாதாரத்தை விஞ்சிய ‘சில’ டாப் இந்திய நிறுவனங்கள்..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ