மைக்ரோசாப்ட் விண்டோஸ் தலைமை பொறுப்பேற்கும் IIT சென்னை முன்னாள் மாணவர்!
ஐஐடி மெட்ராஸ் பட்டதாரியான பவன் டவுலூரி, அமெரிக்காவின் முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு தலைமை தாங்கும் இந்தியர்களின் பட்டியலில் இணைகிறார்.
உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனம் ஏஐ துறையில் தனது வர்த்தகம், முதலீட்டை அதிகரிக்க பல முக்கிய மாற்றங்களை செய்து வருகிறது. மாற்றங்களைச் செய்து வருகிறது. இந்த நிலையில், இந்திய தொழில்நுட்ப கழகங்களில் ஒன்றான சென்னை ஐஐடி-யின் முன்னாள் மாணவரான பவன் டவுலூரி மைக்ரோசாப்ட் விண்டோஸ் மற்றும் சர்ஃபேஸின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு தலைமை தாங்கும் இந்தியர்கள்
பவன் டவுலூரி, (Pavan Davuluri) மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் (Microsoft Windows) மற்றும் சர்ஃபேஸின் புதிய தலைவராக ஆகியதன் மூலம், டாவுலூரி அமெரிக்காவின் (America) முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு தலைமை தாங்கும் இந்தியர்களின் பட்டியலில் இணைகிறார். இதற்கு முன்னதாக தலைமை பொறுப்பில் இருந்த பனோஸ் பனாய், சென்ற வருடம் அமேசான் நிறுவனத்திற்கு சென்ற நிலையில், இவர் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மைக்ரோசாப்ட் விண்டோஸ் மற்றும் சர்ஃபேஸ் பிரிவு இரண்டுக்கும் ஓரே தலைவர்
முன்னதாக, மைக்ரோசாப்ட் நிர்வாகம் விண்டோஸ் மற்றும் சர்ஃபேஸ் குழுக்களை தனித்தனி தலைமையின் கீழ் நிர்வாகம் செய்து வந்தது. டவுலூரி மேற்பார்வையின் கீழ் சர்பேஸ் பிரிவும், மைக்கேல் பரக்கின் என்பவரின் தலைமையில் விண்டோஸ் பிரிவும் செயல்பட்டு இருந்தது. இந்த நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்குள்ளேயே மைக்கேல் பரக்கின் (Mikhail Parakhin) என்பவருக்கு புதிய பதவிகள் கொடுக்கப்பட்டதை அடுத்து, மைக்ரோசாப்ட் விண்டோஸ் மற்றும் சர்ஃபேஸ் பிரிவுக்கு ஓரே தலைவராகப் பவன் டவுலூரி நியமிக்கப்பட்டு உள்ளார்.
டவுலூரியி பதவி உயர்வு குறித்த செய்தி
மைக்ரோசாப்ட் AI எனப்படும் புதிய அமைப்பின் தலைவராக முன்னாள் டீப் மைண்ட் இணை நிறுவனர் முஸ்தபா சுலைமானை பணியமர்த்துவதாக மைக்ரோசாப்ட் கூறிய ஒரு வாரத்திற்குப் பிறகு டவுலூரியின் பதவி உயர்வு குறித்த செய்தி வந்துள்ளது. விளம்பரம் மற்றும் இணைய சேவைகள் பிரிவின் CEO Mikhail Parakhin மற்றும் Bing தேடுபொறி மற்றும் எட்ஜ் உலாவியில் பணிபுரியும் நபர்களை உள்ளடக்கிய அவரது பிரிவு மைக்ரோசாப்ட் AI இன் ஒரு பகுதியாக இருக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | கடற்கரை மணலை எடுத்தால் ₹2 லட்சம் அபராதம்... எச்சரிக்கும் கேனரி தீவுகள் நிர்வாகம்!
ஐஐடி மெட்ராஸ் கல்லூரியில் பட்டம் பெற்ற பவன் டவுலூரி
ஐஐடி மெட்ராஸ் கல்லூரியில் பட்டம் பெற்ற பவன் டவுலூரி மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் நியமிக்கப்பட்டதன் மூலம் சுந்தர் பிச்சை, சத்ய நாதெள்ள வரிசையில் இவரும் இணைந்துள்ளார். டவுலூரி மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் 23 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறார். 1999 இல் மேரிலாந்து பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பை முடித்த பிறகு, மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் சேர்ந்தார். ரிலயபிளிட்டி காம்போனனட் பிரிவு மேலாளராக பணியில் சேர்ந்து தற்போது மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் மற்றும் சர்ஃபேஸ் பிரிவின் தலைவராக உயர்ந்துள்ளார்.
மேலும் படிக்க | மனித மூளையில் சிப்... எண்ணங்களால் கணிணி மவுஸை இயக்கும் பக்கவாத நோயாளி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ