அதிகரிக்கும் Incest உறவு... அமெரிக்காவில் அதிகரிக்கும் ஆபத்துகள் - இதில் என்ன பிரச்னை?

World Bizarre News: அமெரிக்காவில் பரந்த அளவில் மரபணு பரிசோதனைகள் மூலம் நடத்தப்பட்ட ஆய்வில் ஒரு விசித்திரமான மற்றும் அதிர்ச்சியளிக்கும் வகையிலான முடிவுகள் வெளியாகியிருக்கிறது.

Written by - Sudharsan G | Last Updated : Mar 21, 2024, 08:05 PM IST
  • 10 லட்சம் பேரில் 7 ஆயிரம் பேர் Incest உறவின் மூலம் பிறக்கின்றனர்.
  • 1975இல் 10 லட்சம் பேரில் ஒருவர்தான் இருந்துள்ளனர்.
  • தற்போது இந்த போக்கு அதிகரித்துள்ளது.
அதிகரிக்கும் Incest உறவு... அமெரிக்காவில் அதிகரிக்கும் ஆபத்துகள் - இதில் என்ன பிரச்னை? title=

World Bizarre News: மருத்துவ துறையில் மரபணு பரிசோதனை என்பது பல்வேறு காரணங்களுக்காக மேற்கொள்ளப்படும். பொதுவாக, ஒரு நபருக்கு ஏதாவது தீவிர நோய் ஏற்பட்டால் அவரது குடும்பத்தினருக்கு மரபணு சோதனை மேற்கொள்ளப்படும். அதன்மூலம், அந்த நோய் மரபு ரீதியாக வந்ததா அல்லது சூழல் போன்ற மற்ற காரணங்கள் உள்ளதா என்பதை மருத்துவர்கள் கண்டறிவார்கள். அதுமட்டுமின்றி மரபணு பரிசோதனை என்பது ஒருவரின் வம்சாவளியை கண்டறியவும் பயன்படும். 

ஆனால் அமெரிக்காவில் சமீபத்தில் பரந்த அளவில் மரபணு பரிசோதனைகள் மூலம் நடத்தப்பட்ட ஆய்வில் ஒரு விசித்திரமான மற்றும் அதிர்ச்சியளிக்கும் வகையிலான முடிவுகள் வெளியாகியிருக்கிறது. அதாவது, Incest என ஆங்கிலத்தில் சொல்லப்படும் குடும்ப உறுப்பினர்களுக்கு இடையில் வைத்துக்கொள்ளப்படும் உறவு என்பது அமெரிக்காவில் அதிகமாக காணப்படுவதாக அந்த ஆய்வு முடிவில் தெரியவருகிறது.

அதிகமாகும் Incest உறவு

அதாவது, இந்த ஆய்வின் மூலம் அமெரிக்காவில் பிறந்துள்ள பல குழந்தைகள் அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் உறவினால் பிறந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. 1975ஆம் ஆண்டு அமெரிக்காவில் இதுகுறித்து வெளியான ஆய்வு புத்தகம் ஒன்றில் 10 லட்சம் பேரில் ஒரு குழந்தைதான் இதுபோன்ற Incest உறவில் பிறப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், தற்போதைய ஆய்வின்படி பார்த்தோமானால் 10 லட்சம் பேரில் 7 ஆயிரம் பேர் Incest உறவின் மூலம் பிறப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | அமெரிக்காவில் வினோதம்... கிரீன் ஹவுஸ் வாயுக்களை கடத்திய நபர் மீது கடும் நடவடிக்கை!

சமீபத்தில், ஒரு மரபணு பரிசோதனை மூலம் அதிர்ச்சியளிக்கும் உண்மையை கண்டறிந்த விக்டோரியா ஹில் என்ற பெண்மணி இதுகுறித்து ஊடகங்களிடம் பேசியுள்ளார். 39 வயதான அந்த பெண்மணி தனது முன்னாள் காதலுடன் பள்ளி ரீ-யூனியன் விழாவில், தன் குடும்ப பின்னணியை குறித்து பேசிக் கொண்டிருந்தபோது அவருக்கு சில சந்தேகங்கள் கிளம்பியிருக்கிறது. இதனை அடுத்து இருவரும் மரபணு பரிசோதனையை மேற்கொண்டுள்ளார். 

சகோதரர் ஆன முன்னாள் காதலன்

இதில் இருவருக்கும் அதிர்ச்சி காத்திருந்தது. அந்த பெண் அவரின் முன்னாள் காதலனின் தங்கை ஆவார். மேலும், அந்த பெண்ணின் தந்தை உயிரியல் ரீதியிலான தந்தை இல்லை என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து அந்த பெண்மணி பேசுகையில், "இது எனக்கு மிகவும் அதிர்ச்சியளித்தது, நான் இப்போது குடும்பத்தினரின் புகைப்படங்களை பார்க்கிறேன். என் முன்னாள் காதலன் என் உடன்பிறப்பாக இருந்தால், யார் வேண்டுமானாலும் என் உடன்பிறப்பாக இருக்கலாம் அல்லவா..." என்றார். 

இவர் 22 வயதான ஒரே ஒரு சகோதரர் உடன்தான் வளர்ந்து வந்துள்ளார். தற்போது அவருக்கு பல உடன்பிறப்புகள் இருக்கிறார்கள் என தெரியவந்துள்ளது. "ஒரு சகோதரர் (Half Sibling) உடன் உறவு வைத்துக்கொண்டிருந்தேன். ஒரு சகோதரர் உடன் ஒரே பள்ளியில், ஒரே வகுப்பில் படித்தேன்" என தெரிவித்துள்ளார். 

என்ன பிரச்னை?

ஹில்லின் இந்த வழக்கை தற்செயலான இன்செஸ்ட் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை கட்டுப்படுத்த உரிய விதிமுறைகள் இல்லாததால் பெருகி உள்ளது. பெண்கள் கருத்தரிக்க உதவுவதற்காக பலரும் தங்கள் விந்தணுக்களை தானம் செய்வார்கள், இதன் மூலம் பிறந்த குழந்தைகள் மூலமே இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்கிறது. இதுபோன்ற Incest உறவின் விளைவாக பிறக்கும் குழந்தைகளுக்கு பிறப்பு குறைபாடுகள் மற்றும் மரபணு கோளாறுகள் ஏற்படும் அபாயம் அதிகம்.

மேலும் படிக்க | உடலுறவு... அதுவும் மாணவியுடன் உணவக கழிவறையில் - பெண் ஆசிரியருக்கு வாழ்நாள் தடை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News