வாஷிங்டன்: நீண்ட மறுப்புகளுக்குப் பிறகு, ஈரானின் ராக்கெட் தாக்குதலில் தனது 34 வீரர்கள் காயமடைந்ததாக அமெரிக்கா இறுதியாக ஒப்புக் கொண்டுள்ளது. ஈராக்கில் அமெரிக்க நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரான் தளபதி காசிம் சுலைமானின் கொல்லப்பட்ட பின்னர், பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான் இந்த தாக்குதலை நடத்தியது. ஈரானின் உச்ச தலைவரான அயதுல்லா அலி கமேனி அமெரிக்காவை பழிவாங்கப் போவதாக ஏற்கனவே எச்சரித்து இருக்கிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

"ஈரானிய தாக்குதலில் 34 அமெரிக்க வீரர்களுக்கு மூளையில் காயம் ஏற்பட்டுள்ளது" என்று பென்டகன் தெரிவித்துள்ளது. ஜனவரி 8 ஆம் தேதி, ஈராக்கில் உள்ள அமெரிக்க விமானப்படை தளங்களை ஈரான் தாக்கியது. இந்த தாக்குதலில் 80 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டதாக ஈரான் கூறியது. ஆனால் தாக்குதல் நடத்தப்படலாம் என்று பென்டகனின் எச்சரிக்கை காரணமாக வீரர்கள் ஏற்கனவே பதுங்கு குழிகளுக்குள் நுழைந்ததாகவும், படையினருக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என்றும் அமெரிக்கா முதலில் கூறியது.


ஈரானிய ராக்கெட் தாக்குதலின் போது, ​​ஒரு உக்ரேனிய விமானம் விபத்துக்குள்ளானது, அதில் இருந்த 176 பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை நாங்கள் செய்யவில்லை என்று ஈரான் முன்னர் மறுத்தது, ஆனால் பின்னர் அதன் ராக்கெட் தற்செயலாக விமானத்தை தாக்கியதாகக் கூறியது. இதன் பின்னர், இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் ஈரானிய பயணிகள் என்பதால், கமேனியின் ராஜினாமா கோரி ஈரான் சாலையில் போராட்டம் நடத்தினார்கள். இந்த விமானம் தெஹ்ரானில் இருந்து உக்ரைன் தலைநகர் கியேவுக்கு பறந்து கொண்டிருந்தது.


உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.