உலகமே மாசுபாட்டால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மாசுபாட்டைக் குறைக்க உலக அளவில் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, மாசுபாட்டிற்கு பிளாஸ்டிக் ஒரு முக்கிய காரணி. உலகளவில் பிளாஸ்டிக் மாசுபாடு பரவுவதற்கு குளிர்பானம் தயாரிக்கும் 2 நிறுவனங்களே காரணம் என்பது உங்களுக்குத் தெரியுமா? இந்த நிறுவனங்கள் கோகோ கோலா மற்றும் பெப்சிகோ ஆகும். இரண்டு நிறுவனங்களும் தொடர்ச்சியாக நான்காவது ஆண்டாக, பிளாஸ்டிக் மாசுபட்டிற்கான முக்கிய காரணமானர்களில் முதல் இரு இடங்களில் உள்ளன. 'பிரேக் ஃப்ரீ ப்ரம் ப்ளாஸ்டிக்' (Break Free From Plastic) நிறுவனம் இந்த தரவரிசையை வெளியிட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

'ப்ரேக் ஃப்ரீ ப்ரம் ப்ளாஸ்டிக்' உலகளவில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கைக் குறைப்பதற்கும், இந்த மாசுபாடு பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்கும் ஒரு இயக்கமாக செயல்படுகிறது. 2021 ஆம் ஆண்டின் சிறந்த மாசுபடுத்தும் நிறுவனங்களில் யுனிலீவர், நெஸ்லே, ப்ராக்டர் & கேம்பிள், மொண்டலெஸ் இன்டர்நேஷனல், பிலிப் மோரிஸ் இன்டர்நேஷனல், டானோன், மார்ஸ் மற்றும் கோல்கேட்-பால்மோலிவ் ஆகியவை சில.


ALSO READ | Florida: சாலையில் ‘ஓணான்கள்’ மழை; பதற்றத்தில் மக்கள்!


உலகளாவிய பிளாஸ்டிக் உற்பத்தி, 1966 ஆண்டில் 20 மில்லியன் மெட்ரிக் டன் என்ற அளவிலிருந்து 2015 ஆம் ஆண்டில் 381 மில்லியன் மெட்ரிக் டன்னாக (MMT) அதிகரித்துள்ளது அதாவது அரை நூற்றாண்டில் 20 மடங்கு அதிகரித்துள்ளது. Tearfund நிறுவனத்தின் மூத்த கொள்கை ஆலோசகர் ஜோன் கிரீன் இது குறித்து கூறுகையில், நிறுவனங்கள் மறுசுழற்சி மற்றும் பைலட் திட்டங்களில் கவனம் செலுத்துகின்றன என்றாலும் அது போதுமானதாக இல்லை. ஒற்றைப் பயன்பாட்டு பேக்கேஜிங்கைச் சார்ந்திருப்பதைக் குறைக்க நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். Coca-Cola போன்ற நிறுவனக்கள் தான் விற்பனை செய்த குளிர் பானங்கள் காலி பாட்டில்களை தாங்களே சேகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


குறைந்த வருமானம் உள்ள நாடுகளில், சுமார் 93 சதவீத குப்பைகள் எரிக்கப்படுகின்றன அல்லது சாலைகள், திறந்தவெளிகள் அல்லது நீர்வழிகளில் கொட்டப்படுகின்றன என உலக வங்கி கூறுகிறது. இது வடிகால்களை அடைத்து வெள்ளத்தை ஏற்படுத்துகிறது. இது நீர் மூலம் பரவும் நோய்களுக்கும் காரணமாகிறது. ஆரம்பத்தில் கடல் கழிவுகளுக்கு கப்பல்கள் மற்றும் கடல் சார்ந்த தொழில்கள் மட்டுமே காரணமாக இருந்த நிலையில், தற்போது நிலத்தில் பரவும் பிளாஸ்டிக் கழிவுகள் ஆறுகள் மற்றும் ஓடைகள் வழியாக கடலுக்குச் செல்கிறது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ALSO READ | வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் கழிப்பறைக்கு ‘24 மணி’ நேர காவல்!


கடலில் வாழும் சுமார் ஆயிரம் உயிரினங்கள் பிளாஸ்டிக்கால் பாதிக்கப்பட்டு, அவை மீண்டும் கடல் உணவுப் பொருட்களின் மூலம் மனிதர்களுக்கும் அச்சுறுத்தலாக மாறுவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. உலகில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 8 MMT பிளாஸ்டிக் கழிவுகள் உருவாகின்றன என்றும், இது ஒவ்வொரு நிமிடமும் ஒரு லாரி பிளாஸ்டிக் கழிவுகளை கடலில் கொட்டுவதற்கு சமம் என்று அறிக்கை கூறுகிறது. இதே நிலை நீடித்தால், 2030-ம் ஆண்டுக்குள் கடலில் சேரும் பிளாஸ்டிக்கின் அளவு 53 MMT என்ற அளவை எட்டும். இது ஆண்டுதோறும் பிடிக்கப்படும் மீன்களின் மொத்த எடையில் பாதியாகும். மறுசுழற்சிக்கான வசதிகள், குறிப்பாக 1980 களில் இருந்து உருவாக்கப்படவில்லை, இதன் விளைவாக பிளாஸ்டிக் கழிவுகள் குப்பைக் கிடங்கில் அதிக அளவில் நிரப்பப்படுகின்றன.


மாசுபாடு நெருக்கடியை சமாளிக்க பல வழிகளை அறிக்கை பரிந்துரைத்துள்ளது. இதில் ஒன்று கச்சா பிளாஸ்டிக் உற்பத்தியைக் குறைப்பது. மேலும், வளர்ந்த நாடுகள் வீட்டுக் கழிவுகளைக் கொட்டுவதற்குப் பதிலாக, அதற்கென்று ஒரு நிலையான இடத்தை உருவாக்க வேண்டும் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் நீர்வழிகளில் நுழைவதைத் தடுத்தாலே, அதிக அளவு கழிவுகள் நேரடியாக கடலுக்குள் செல்வதைத் தடுக்க முடியும் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 


ALSO READ | Spider Bite: சிறிய சிலந்தி தானே என எண்ண வேண்டாம்; ஒரு பெண்மணியின் பகீர் அனுபவம்!


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR