Philippine military plane crash: விமான விபத்தில் 47 பேர் பலி, 49 பேர் காயம்
பிலிப்பைன்ஸ் விமான விபத்து நடைபெற்றபோது விமான நிலையத்தில் இருந்த பொதுமக்களில் மூவர் கொல்லப்பட்டனர், நால்வர் காயமடைந்தனர்...
பிலிப்பைன்ஸ் நாட்டில் நேற்று நடைபெற்ற விமான விபத்தில் 47 பேர் கொல்லப்பட்டனர், 49 பேர் காயமடைந்தனர். 96 பேர் பயணித்த ராணுவ விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது. பிலிப்பைன்ஸ் விமானப்படை விமானத்தில் இருந்த 96 பயணிகளில் 47 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு ராணுவத் தலைவர் சிரிலிட்டோ சோபெஜானா தெரிவித்தார்.
இந்த விபத்தில் நாற்பத்தொன்பது ராணுவ வீரர்கள் காயமடைந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இந்த விமான விபத்து நிகழ்ந்தபோது, விமான நிலையத்தில் இருந்த 3 சிவிலியன்கள் கொல்லப்பட்டன, நான்கு சிவிலியன்கள் காயமடைந்தனர் என்றும் தேசிய பாதுகாப்புத் துறை (The Department of National Defence) தெரிவித்துள்ளது. காயமடைந்தவர்களில் பலரின் நிலைமை மோசமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகமாகலாம் என்று அஞ்சப்படுகிறது.
கிளர்ச்சியை அடக்குவதற்காக துருப்புக்களை ஏற்றிக்கொண்டு சென்ற ராணுவ விமானம், தெற்கு சுலு மாகாணத்தில் உள்ள ஜோலோ விமான நிலையத்தில் தரையிறங்கும்போது, விமான ஓடுபாதையைத் தாண்டிச் சென்றதாக ராணுவ செய்தித் தொடர்பாளர் கர்னல் எட்கார்ட் அரேவலோ தெரிவித்துள்ளார்.
Also Read | பிலிப்பைன்ஸ் ராணுவ விமான விபத்து; 17 பேர் பலி 40 பேர் மீட்பு, தேடுதல் பணி தீவிரம்
இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதாக பாதுகாப்பு செயலாளர் டெல்ஃபின் லோரென்சானா (Defence Secretary Delfin Lorenzana) தெரிவித்தார். விபத்தின் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் முடிந்ததும் விபத்துதொடர்பான விசாரணைத் தொடங்கும்.
விமானத்தின் மீது தாக்குதல் நடத்தியதற்கான எந்த அடையாளமும் இல்லை என பிலிப்பைன்ஸ் நாட்டு ராணுவம் தெரிவிக்கின்றது.
தலைநகர் மணிலாவிலிருந்து தெற்கே சுமார் 950 கிமீ (600 மைல்) தொலைவில் உள்ளது சுலு மாகாணம். அது தீவிரமாக செயல்பட்டுவரும் அபு சயாஃப் என்பவர் தலைமையிலான கிளர்ச்சி குழுவின் கோட்டையாகும். இந்த குழுவினர், கொள்ளை மற்றும் திருட்டு சம்பவங்களை அரங்கேற்றி வருகின்றனர். அவர்களை அடக்குவதற்காக ராணுவம் முயல்கிறது.
Also Read | MiG-21 Accident: IAF போர் விமானம் பஞ்சாபில் விபத்துக்குள்ளானது
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR