தெற்கு பிலிப்பைன்ஸின் சுலு மாகாணத்தில் ஜோலோ தீவில் தரையிறங்க முயன்ற பிலிப்பைன்ஸ் நாட்டின் ராணுவ விமானம் விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான விமானத்தில் மொத்தம் 85 பேர் இருந்தனர்.அதில் 17 பேர் பலியானதாக அஞ்சப்படுகிறது. இதுவரை 40 பேர் மீட்கப்பட்டனர். எஞ்சியவர்களை தேடும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்நாட்டின் தெற்குப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 04) ராணுவ விமானம் விபத்துக்குள்ளானதாக ஆயுதப்படைத் தலைவர் சோபேஜானா (Sobejana) தெரிவித்துள்ளார். இதுவரை 15 பேர் மீட்கப்பட்டுள்ளனர், மேலும் விமானத்தில் மீதமுள்ளவர்களைக் காப்பாற்றுவதற்காக இப்பகுதியில் ஏற்கனவே தேடல் மற்றும் மீட்பு பணி தொடங்கப்பட்டுள்ளது.
"மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக மீட்புப் பணியாளர்கள் விபத்து நடைபெற்ற இடத்தில் உள்ளனர், மேலும் பல உயிர்களை காப்பாற்ற முடியும் என்று நம்புகிறோம்" என்று சோபேஜானா கூறினார்
சி -130 விமானம், தெற்கு பிலிப்பைன்ஸின் சுலு மாகாணத்தில் ஜோலோ தீவில் தரையிறங்க முயன்றபோது விபத்துக்குள்ளானதாக ஜெனரல் சிரிலிட்டோ சோபேஜானா தெரிவித்தார்.
Also Read | MiG-21 Accident: IAF போர் விமானம் பஞ்சாபில் விபத்துக்குள்ளானது
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR