ஆப்கானிஸ்தான், மாலத்தீவு பிரச்சனையைப் பற்றி இந்திய பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப் ஆகியோர் இன்று தொலைபேசியில் விவாதித்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது தொடர்பாக அமெரிக்க அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகை வட்டாரம் வெளியிட்டுள்ள செய்தி, இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப் ஆகியோர் இன்று (பிப்.,09) தொலைபேசி வாயிலாக பேசினர்.


அப்போது மாலத்தீவு அரசியல் நெருக்கடி விவகாரம், வடகொரியா அணு ஆயுதம், இந்திய பசிபிக் பிராந்திய பாதுகாப்பு, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட சர்வதேச பிரச்னைகள் குறித்து இரு நாட்டு தலைவர்களும் ஆலோசித்தனர். இவ்வாறு வெள்ளை மாளிகை வட்டாரம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.



மேலும், மாலத்தீவினால் நாடு சிக்கிக் கொண்டுவந்த அரசியல் கொந்தளிப்பைப் பற்றி கவலை தெரிவித்திருந்தார். இந்திய பிரதமரும் அமெரிக்க ஜனாதிபதியும் ஜனநாயக அமைப்புக்களுக்கு மரியாதை செலுத்தும் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்தினர்.