பாகிஸ்தான் கோடீஸ்வரர் மியான் முகமது மன்சா, அந்நாட்டின் மிக முக்கிய தொழில் அதிபர். அவர் லாகூரை தளமாகக் கொண்ட சர்வதேச நிறுவனமான நிசாத் குழுமத்தின் நிறுவனர் மற்றும் அதன் தலைமை நிர்வாக அதிகாரியான இவர்  பாகிஸ்தானில் அதிக வரி செலுத்தும் தனிநபர்  என்பதும் குறிப்பிடத்தக்கது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில், கோடீஸ்வர தொழிலதிபர் மியான் மன்ஷா, இந்தியா-பாகிஸ்தான் உறவுகள் குறித்து முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். இந்தியா-பாகிஸ்தான் இடையேயான பேச்சுவார்த்தைகள் திரைமறைவில் நடந்து வருவதாக அவர் கூறுகிறார். எங்கள் முயற்சி பயனளித்தால், ஒரு மாதத்தில் பிரதமர் மோடி (PM Modi) பாகிஸ்தான் பயணம் மேற்கொள்வார் என்றும் மியான் மன்ஷா கூறினார். பாகிஸ்தான் கோடீஸ்வரர். இது குறித்து மேலும் கூறுகையில்,  யாரும் நிரந்தர எதிரிகள் இல்லை, இந்தியாவுடனா உறவை சரிசெய்ய வேண்டும் என்று கூறினார்.


'பாகிஸ்தானில் அமைதி தேவை'


இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் குறித்து பேசிய பாகிஸ்தானின் (Pakistan) பன்னாட்டு நிறுவனமான 'நிஷாத் குரூப்' தலைவர் மியான் மன்ஷா, 1965-ம் ஆண்டு போருக்கு முன்பு இந்தியாவுடனான பாகிஸ்தான் வர்த்தகம் 50 சதவீதம் என்ற அளவில் இருந்தது. எங்களுக்கு இப்போது அமைதி தேவை என்றார் அவர். இந்தியாவிடம் சிறந்த தொழில்நுட்பம் உள்ளது. இந்தியாவுக்கு பயனளிக்கக் கூடிய பல விஷயங்கள் நம்மிடமும் உள்ளன. நிரந்தர எதிரி என யாரும் இல்லை. பாகிஸ்தானில் ஏழ்மை அதிகமாக உள்ளது என்றார்.


ALSO READ | குற்றங்கள் அதிகரிக்க TikTok தான் காரணம்; உஸ்பெகிஸ்தானில் வலுக்கும் எதிர்ப்பு


இந்தியாவுடனான நல்லுறவு தேவை 


சமீபத்தில் வெளியிடப்பட்ட முதல் தேசிய பாதுகாப்புக் கொள்கையில், இந்தியாவுடனான அமைதியை பாகிஸ்தான் வலியுறுத்தியுள்ள நிலையில், பாகிஸ்தானிய கோடீஸ்வரர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். சமீபத்தில், தேசிய பாதுகாப்புக் கொள்கையுடன் தொடர்புடைய அதிகாரி ஒருவர், பாகிஸ்தானின் எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூன் செய்தித்தாளுக்கு அளித்த பேட்டியில், அடுத்த 100 ஆண்டுகளுக்கு இந்தியாவுடன் பகைமை கொள்ள மாட்டோம் என்று கூறியிருந்தார். இந்த புதிய கொள்கையில், அண்டை நாடுகளுடன் அமைதிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் பேச்சுவார்த்தை மற்றும் முன்னேற்றம் ஏற்பட்டால், இந்தியாவுடனான வர்த்தக உறவுகள் இயல்பு நிலைக்கு திரும்பும் வாய்ப்பு உள்ளது என்றும் அவர் கூறியிருந்தார்.


இந்தியாவுடன் சமரசம் 


இருப்பினும், புதுதில்லியில் தற்போதைய மோடி அரசாங்கத்தின் கீழ் இந்தியாவுடன் சமரசம் ஏற்பட வாய்ப்பில்லை என்றும் பாகிஸ்தான் அதிகாரி கூறினார். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆக்கிரமிப்பு செய்வதற்கு முன்பு, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே திரைமறைவில் பேச்சு வார்த்தைகள் நடந்து வந்ததாக இதற்கு முன்பும் செய்திகள் வந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா மற்றும் பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு தொடர்பான இரண்டு உயர் அதிகாரிகள் மூன்றாவது நாட்டில் சந்தித்ததாகவும் கூறப்பட்டது.


ALSO READ | ‘நிறைய சாப்பிட்டா நாட்டுக்கு நல்லதல்ல’: அதிபர் கிம்மின் லேட்டஸ்ட் உத்தரவு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR