தூதரை நியமித்த பாகிஸ்தான், ஒப்புக்கொள்ளாமல் அடம் பிடிக்கும் அமெரிக்கா!

கடந்த ஆகஸ்ட் மாதம் வரை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் (PoK) அதிபராக பணியாற்றிய கான், நவம்பரில் அமெரிக்காவுக்கான தூதராக நியமிக்கப்பட்டார்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 2, 2022, 02:02 PM IST
  • பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் (PoK) அதிபராக பணியாற்றிய கான், நவம்பரில் அமெரிக்காவுக்கான தூதராக நியமிக்கப்பட்டார்.
  • வாஷிங்டனில் இருந்து வெளியேறும் பாகிஸ்தான் தூதர் ஆசாத் மஜீத் கானுக்கு பதிலாக கான் நியமிக்கப்பட்டார்.
  • எனினும் இவரது நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்க அமெரிக்கா காலம் கடத்தி வருகிறது.
தூதரை நியமித்த பாகிஸ்தான், ஒப்புக்கொள்ளாமல் அடம் பிடிக்கும் அமெரிக்கா! title=

வாஷிங்டனுக்கான பாகிஸ்தான் தூதராக நியமிக்கப்பட்டுள்ள மசூத் கானை நியமிப்பதற்கு அமெரிக்க வெளியுறவுத்துறை வழக்கத்திற்கு மாறாக நீண்ட நேரம் எடுத்து வருகிறது. மேலும் இந்த தாமதம் செயல்பாட்டில் ஒரு இக்கட்டான சூழலை ஏற்படுத்தி வருகிறது என டான் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் வரை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் (PoK) அதிபராக பணியாற்றிய கான், நவம்பரில் அமெரிக்காவுக்கான தூதராக நியமிக்கப்பட்டார்.

இவர் இதற்கு முன்னர் ஜெனீவா மற்றும் நியூயார்க்கில், ஐ.நாவுக்கான பாகிஸ்தானின் நிரந்தர பிரதிநிதியாகவும், சீனாவுக்கான தூதராகவும் பணியாற்றியுள்ளார்.

வாஷிங்டனில் (Washington) இருந்து வெளியேறும் பாகிஸ்தான் தூதர் ஆசாத் மஜீத் கானுக்கு பதிலாக கான் நியமிக்கப்பட்டார்.

மசூத் கானுக்கான ஒப்பந்தத்திற்கான கோரிக்கை நவம்பர் இரண்டாவது வாரத்தில் வெளியுறவுத்துறைக்கு அனுப்பப்பட்டதாக பாகிஸ்தான் தூதரக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இங்கு ஒப்பந்தம் என்பது அதிகாரி பணியாற்றப்போகும் நாடு வரவிருக்கும் தூதாண்மை அதிகாரிக்கு அளிக்கும் ஒப்புதலாகும்.

வழக்கமாக, கடந்த காலங்களில் பாகிஸ்தான் தூதர்களுக்கான ஒப்பந்தங்களை வெளியிட வெளியுறவுத்துறை நான்கு முதல் ஆறு வாரங்கள் எடுத்துக்கொள்வது வழக்கம் என்று முன்னாள் வெளியுறவு செயலாளர் கூறினார்.

"இம்முறை அவர்கள் வழக்கத்திற்கு மாறாக நீண்ட நேரம் எடுத்துக்கொள்கிறார்கள்," என்று மற்றொரு தூதாண்மை அதிகாரியை மேற்கோள்காட்டி டான் செய்தி கூறுகிறது.

ALSO READ | கனடாவில் அதிகரிக்கும் பதற்றம்: பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குடும்பத்துடன் தலைமறைவு?

புவிசார் அரசியல் சூழல் காரணமாக அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் இடையிலான உறவுகளில் சில விரிசல்கள் விழுந்துள்ள நிலையில், இந்த தாமதம் நிலைமையை இன்னும் மோசமாக்கியுள்ளது. 

ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிய பிறகு பாகிஸ்தான் (Pakistan) மீதான அமெரிக்காவின் ஆர்வம் குறைந்துவிட்டது. மேலும், வாஷிங்டன் பாகிஸ்தானுடனான உறவுகளை சீனாவுடனான அதன் மூலோபாய போட்டியின் கண்ணோட்டத்தில் பார்க்கிறது. 

"அமெரிக்காவுக்கான பாகிஸ்தானின் புதிய தூதராக மசூத் கானை அங்கீகரிப்பதில் வெளியுறவுத்துறை இடைநிறுத்தம் செய்துள்ளதை நான் வரவேற்கத்தக்க விஷயமாக பார்த்தாலும், வெறும் இடைநிறுத்தம் மட்டும் போதாது. மசூத் கான் அமெரிக்காவுக்கு அளிக்கும் அனைத்து தூதாண்மை நற்சான்றிதழ்களையும் அமெரிக்கா நிராகரிக்க வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன். இந்த ஜிஹாதியை அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதராக நியமிக்க பாகிஸ்தான் அரசு எடுக்கும் முயற்சிகளை அமெரிக்கா முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும்" என்று ஸ்காட் பெர்ரி என்ற காங்கிரஸ்காரர் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு (Joe Biden) கடிதம் எழுதியுள்ளார்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் தலைவராக மசூத் கான் கடைசியாக பதவி வகித்ததுதான், அவரது தற்போதைய நியமனத்தில் தாமதம் ஏற்பட காரணம் என வெளியுறவுத் துறை அலுவலகத்தில் உள்ளவர்கள் நம்புகின்றனர்.

ALSO READ | வைர திருட்டால் பிரிந்த இரு நாடுகள்: 30 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய துவக்கம்

Trending News