ரஷ்யா - உக்ரைன் போருக்கு பின் முதல் முறையாக ஜெலன்ஸ்கியை சந்தித்த பிரதமர் மோடி!
ஹிரோஷிமாவில் நடைபெற்ற G7 மாநாட்டின் போது உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார்.
PM Modi Meets Zelensky:ஹிரோஷிமாவில் நடைபெற்ற ஜி7 மாநாட்டின் போது உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார். கடந்த ஆண்டு பிப்ரவரியில் உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பிற்குப் பிறகு இரு தலைவர்களுக்கும் இடையே நடந்த முதல் நேருக்கு நேர் உரையாடல் என்பதால் இந்த சந்திப்பு ஒரு முக்கியமான மைல்கல்லாக பார்க்கப்பட்டது. இந்த சந்திப்பு குறித்த செய்தியை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ள பிரதமர் அலுவலக பதிவில், “ஹிரோஷிமாவில் ஜி-7 மாநாட்டையொட்டி, அதிபர் ஜெலென்ஸ்கியுடன் உடன் பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
உரையாடலின் போது, உக்ரைன் போர் உலகிற்கு ஒரு பெரிய பிரச்சினை என்றும் இந்தப் போரினால் உலகமே பாதிக்கப்பட்டுள்ளது என்றார். இது ஒரு போர் பிரச்சினை மட்டுமல்ல, பொருளாதாரம், அரசியல் மற்றும் மனிதநேயம் ஆகியவற்றின் பெரிய பிரச்சினை; இந்தப் போரைத் தீர்க்க இந்தியாவும் தானும் என்ன வேண்டுமானாலும் செய்வோம் என்றும் பிரதமர் மோடி கூறினார். உக்ரைன் பிரச்சனை என்பது தனக்கு மனிதாபிமான பிரச்சினை என என்று பிரதமர் மோடி விவரித்தாக ஊடக அறிக்கைகள் கூறுகின்றன.
வருடாந்திர ஜி 7 உச்சி மாநாட்டில் கலந்துகொள்வது தவிர, பப்புவா நியூ கினியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கான பயணங்களை உள்ளடக்கிய தனது மூன்று நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தைத் தொடங்கிய நிலையில், நேற்று பிரதமர் மோடி ஹிரோஷிமா சென்றடைந்தார். G7 உச்சிமாநாட்டில் அதிபர் ஜெலென்ஸ்கி கலந்துகொண்டது, செல்வாக்குமிக்க குழுவின் தற்போதைய தலைவரான ஜப்பானால் விடுக்கப்பட்ட அழைப்பின் விளைவாகும்.
G7 மாநாடு என்பது உலகின் ஏழு பெரிய பொருளாதார நாடுகளின் தலைவர்களின் வருடாந்திர கூட்டமாகும். இந்த குழுவில் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் உள்ளனர். பொருளாதார ஒத்துழைப்பு, சர்வதேச பாதுகாப்பு, காலநிலை மாற்றம் மற்றும் நீடித்த நிலையான வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு உலகளாவிய பிரச்சினைகளில் இந்த தலைவர்கள் தங்கள் முயற்சிகளை விவாதிக்கவும் ஒருங்கிணைக்கவும் உச்சிமாநாடு ஒரு தளத்தை வழங்குகிறது.
G7 (முன்னர் 2014 இல் ரஷ்யா வெளியாறுவதற்கு முன்பு வரை G8 என அறியப்பட்டது) தலைவர்கள் வெளிப்படையான விவாதங்களில் ஈடுபடவும், கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ளவும் மற்றும் உலகளாவிய சவால்களை சாமாளிப்பதில் பொதுவான நிலையைக் கண்டறியவும் ஒரு மன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. உச்சிமாநாடுகள் வழக்கமாக முறையான மற்றும் முறைசாரா கூட்டங்களின் தொடர்களைக் கொண்டிருக்கும். ஒரே நேரத்தில் இருதரப்பு விவாதங்களும் நடைபெறுகின்றன, தலைவர்கள் குறிப்பிட்ட பிரச்சினைகளைத் தீர்க்கவும் வலுவான உறவுகளை வளர்க்கவும் அனுமதிக்கிறது. G7 உறுப்பினர்களைத் தவிர, உச்சிமாநாட்டில் பெரும்பாலும் பிற நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகளை விருந்தினர்களாக அல்லது பார்வையாளர்களாக அழைக்கின்றன. இது ஒரு பரந்த முன்னோக்கு மற்றும் உள்ளடக்கிய உரையாடலை அனுமதிக்கிறது.
ஜப்பானின் ஹிரோஷிமாவில் நடைபெறும் G7 மாநாட்டில், நான்காவது முறையாக பிரதமர் மோடி பங்கேற்கிறார். G7 மாநாட்டைத் தவிர 40க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் மோடி கலந்து கொள்கிறார். 24க்கும் மேற்பட்ட உலகத் தலைவர்களுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துவார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. சில தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. ஜி7 மாநாட்டில் பங்கேற்குமாறு ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா மோடிக்கு அழைப்பு விடுத்திருந்தார். இந்தியாவைத் தவிர மற்ற ஏழு நாடுகளுக்கு ஜப்பான் அழைப்பு அனுப்பியுள்ளது. ஜி7 மாநாட்டில் சீனாவும் ரஷ்யாவும் இடம்பெறாது. அதாவது, ஜி7 மாநாடு ஒருவகையில் சீனாவுக்கும் ரஷ்யாவுக்கும் எதிரான மேற்கத்திய நாடுகளின் மாபெரும் அமைப்பாக மாறியுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ