ரஷ்யாவின் எதிர் கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி (Alexey Navalny), சுமார் ஒன்றரை மாதங்களுக்கு முன்னால், விமானத்தில் மாஸ்கோவிற்கு பயணம் செய்தி கொண்டிருந்த போது அவர்  உடல் நிலை சரியில்லாமல் போய் மயங்கி விழுந்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அலெக்ஸிக்கு கொடுக்கப்பட்ட தேநீரில் விஷம் இருந்ததாக சந்தேகிக்கப்பட்டது.


அவர் சிறிது நாட்கள் கோமாவில் இருந்தார். தீவிர சிகிச்சைக்கு பிறகு, அவர் பிழைத்துள்ளார்.


ரஷ்ய எதிர் கட்சித் தலைவர் நவ்லினி விஷத்தினால் பாதிக்கப்படுவது இது முதல் முறை அல்ல. முன்னதாக, கடந்த ஆண்டு ஜூலை மாதம், கூட அலெக்ஸி போலீஸ் காவலில் இருந்தபோது விஷம் கொடுக்கப்பட்டதாக சந்தேகிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அவருக்கு ஒரு  வினோதமான ஒவ்வாமை ஏற்பட்டது.


மேலும் படிக்க | ரஷ்ய எதிர்கட்சித் தலைவருக்கு விஷம் கொடுக்கப்பட்டதா... அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!!


இந்நிலையில், ரஷ்யாவில் நடந்த விஷ சம்பவம்  உலகின் கவனத்தை ஈர்த்தது.


ரஷ்யாவின் அதிபர் விளாடிமிர் புடின் இதில் சமபந்தப்பட்டிருப்பதாக எதிர் கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி நேரிடையாக வே குற்றம் சாட்டியுள்ளார்.


ஜெர்மன் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில், அவர், இதை நேரிடையாகவே குறிப்பிட்டார். தான் பயப்படவில்லை என்றும் ரஷ்யாவிற்கு திரும்ப விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார். 


அதற்கு பதிலளிக்கும் வகையில், பேசிய கிரெம்லின் செய்தி தொடர்பாளர் டிமித்ரி பெஷ்கோவ், அவரது அனைத்து குற்றசாட்டுகளையும் நிராகரித்ததோடு, ரஷ்யாவில், அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். எல்லா வித சிகிச்சை வசதிகளும் உள்ளது. தாராளமாக வரலாம் எனக் கூறியுள்ளார்.


நவ்லினியின் உடல்நிலை மோசமடைவதைக் கண்டு, அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அவரை ஜெர்மனிக்கு சிகிச்சைக்காக அனுப்பினர். பல விசாரணைகள் மூலம் நவ்லெனிக்கு விஷம் கொடுத்ததற்கான ஆதாரங்கள் கிடைத்தன.


சோவியத் ஒன்றியத்தின் சகாப்தத்தில் உருவாக்கப்பட்ட ஒரு ஆபத்தான விஷமான நோவிச்சோக் என்னும் நரம்பு மண்டலத்தை பாதிக்கும் விஷம் நவ்லெனிக்கு வழங்கப்பட்டது.  ரஷ்யாவில் பல அரசியல் போட்டியாளர்கள் இந்த விஷத்தினால் வீழ்ந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | ஆர்மீனியா-அஜர்பைஜான் இடையில் தீவிரமடையும் தாக்குதல்.... மூன்றாம் உலக போர் மூளூமா..!!!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR