அஜர்பைஜான்: நாகோர்னா- கராபக் பகுதிக்கு ஜிஹாதி தீவிரவாதிகள் அனுப்பப்படுவதாக பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கூறியதில் இருந்து, ஆர்மீனியா மற்றும் அஜர்பைஜான் இடையே ஷெல் தாக்குதல்கள் தீவிரப்படுத்தியுள்ளன. சர்ச்சைக்குரிய நாகோர்னி-கராபாக் பிராந்தியத்தில் சண்டையை நிறுத்தத்தை ஏற்படுத்த மேற்கு நாடுகள் மற்றும் மாஸ்கோ மேற்கொண்ட முயற்சி வெற்றி பெறவில்லை.
ரஷ்யா-அமெரிக்கா இந்த சர்ச்சையை முடிவுக்கு கொண்டுவருமாறு முறையிட்டுள்ளன
வியாழக்கிழமை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் (Russian President Vladimir Putin), அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (US President Donald Trump) மற்றும் பிரெஞ்சு அதிபர் இம்மாஎனுவேல் மைக்ரோன் (French President Emmanuel Macron) ஆகியோர். இரு தரப்பினரும் சர்ச்சையை தீர்க்க பேச்சுவார்த்தை நடத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஆர்மீனிய பிரதமர் நிக்கோலஸ் பஷினான் மற்றும் அஜர்பைஜான் தலைவர் இல்ஹாம் அலியேவ் ஆகியோர் பேச்சுவார்த்தைக்கான கோரிக்கைகளை நிராகரித்துள்ளனர்.
ரஷ்யா துருக்கியுடன் பேச்சு வார்த்தை நடத்துகிறது
அதே நேரத்தில், மோதலில் அஜர்பைஜானை ஆதரிக்கும் துருக்கியுடன் பேச்சுவார்த்தை நடத்துவாதாக, ரஷ்யா கூறியுள்ளது. ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் மற்றும் துருக்கியின் பிரதிநிதி மெவ்லட் கவ்ஸொக்லு ஆகியோர் நிலைமையை மேம்படுத்துவதற்கு ஒன்றிணைந்து செயல்படத் தயாராக இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.
கராபாக் பகுதியில் உள்ள சிறிய நகரமான மார்டூனியில் அஜர்பைஜான் நடத்திய கடுமையான துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் இறந்தனர் மற்றும் 11 பேர் காயமடைந்தனர். கராபாக் அருகே ஆர்மீனியாவுக்குள் இரண்டு கிராமங்கள் மீது அஜர்பைஜான் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது.
பொதுமக்கள் பகுதிகளிலும் துப்பாக்கிச் சூடு
ஆர்மீனிய துணைப் பிரதமர் டிக்ரான் அவினயன் இதுவரை 1,280 அஜர்பைஜான் வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், 2,700 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஆர்மீனிய வீரர்கள் மீது 'க்ரஷ் பீரங்கி தாக்குதல்' நடந்ததாக அஜர்பைஜானின் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.
சர்வதேச தலைவர்கள் கோரிக்கையை புறக்கணிக்கும் அர்மீனியா- அஜர்பைஜான் தலைவர்கள்
இரு தரப்பினரும் பொதுமக்கள் பகுதிகளில் ஒருவருக்கொருவர் தாக்குகிறார்கள். போராட்டத்தை நிறுத்துமாறு சர்வதேச தலைவர்களின் வேண்டுகோளையும் அவர்கள் புறக்கணித்து வருகின்றனர். விளாடிமிர் புடின், மைக்ரோன் மற்றும் டிரம்ப் ஆகிய உலக தலைவர்கள் இரு தரப்பினரையும் உடனடியாக சண்டையை நிறுத்திவிட்டு பரஸ்பரம் பேச்சுவார்த்தை நடத்துமாறு வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் படிக்க | முன்னாள் சோவியத் நாடுகளான அர்மீனியா அஜர்பைஜான் மோதலுக்கான காரணம் என்ன..!!!
போர் என்ற போர்வையில் பயங்கரவாதம்
அஜர்பைஜானும் துருக்கியும் வெளிநாட்டு பயங்கரவாதிகளின் உதவியுடன் போராடுகின்றன என்று ஆர்மீனியா அரசியல்
தலைவர் நிக்கோல் பாஷினியன் தெரிவித்துள்ளார். இந்த பயங்கரவாதத்தால் அமெரிக்கா, ஈரான், ரஷ்யா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கும் அச்சுறுத்தல் உள்ளன என்று அவர் கூறியுள்ளார்.
மறுபுறம், அஜர்பைஜானின் நட்பு நாடான துருக்கியின் அதிபர் தயிப் எர்டோகன், அஜர்பைஜான் இராணுவத்தை முழுமையாக ஆதரிப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார். கர்பாக்கை விட்டு வெளியேற்றுமாறு துருக்கி வியாழக்கிழமை அன்று ஆர்மீனிய துருப்புக்களுக்கு வேண்டுகோள் விடுத்தது. ஆர்மீனியாவை சேர்ந்த 104 வீரர்கள் மற்றும் 13 பொதுமக்கள் இறந்துள்ளனர். மறுபுறம், அஜர்பைஜான் இராணுவ உயிரிழப்பு குறித்த விபரம் எதுவும் தெரிவிக்கவில்லை.
1994 மேற்கொள்ளப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கைக்கு பின்னர், மோதலைத் தீர்க்க, இரு தரப்பினருக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளால் பிரச்சினை தீர்க்கப்படவில்லை.
மேலும் தற்போதுள்ள சூழ்நிலையில், போர் மூள்வதற்கான அபாயமும் அதிகரித்துள்ளது.
இது மூன்றாவது உலக போராக மாறக்கூடாது என உலக தலைவர்கள் முயற்சிக்கின்றனர்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR