புதுடெல்லி: இலங்கையின் இலங்கையின் இடதுசாரி ஜனதா விமுக்தி பெரமுனா (Janatha Vimukthi Peramuna) கட்சித் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான குழுவினர் மூன்று நாள் பயணமாக இன்று (2024 பிப்ரவரி 5, திங்கட்கிழமை) புதுடெல்லி வந்துள்ளனர். இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் உடனான அவரது சந்திப்பு ஆக்கபூர்வமாக இருந்ததாக தெரிகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த சந்திப்பு தொடர்பாக எக்ஸ் வலைதளத்தில் செய்தி வெளியிட்ட இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்க, மகிழ்ச்சி தெரிவித்தார்.



"இன்று காலை இலங்கையின் NPP மற்றும் JVP இன் தலைவரான அனுரகுமார திஸாநாயக்க அவர்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தியா மற்றும் இலங்கை இடையிலான இருதரப்பு உறவுகள் மற்றும் அதன் ஆழமான பரஸ்பர நன்மைகள் பற்றி ஆலோசித்தோம். இந்த சந்திப்பில், இலங்கை எதிர்கொள்ளும்  பொருளாதார சவால்கள் மற்றும் இலங்கை சென்றுக் கொண்டிருக்கும் பாதை பற்றி அவருடன் பேசினேன்" என்று ஜெய்சங்கர் அவர்களின் எக்ஸ் பதிவு கூறுகிறது.


இந்தியா, எப்போதுமே தனது அண்டை நாடான இலங்கையுடன் நட்புரீதியாக இருப்பதாகவும், சார்க் கொள்கைகளுடன் நம்பகமான பங்காளியாகதொடர்ந்து இருக்கும் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்தார்.


ஜே.வி.பி அல்லது மக்கள் விடுதலை முன்னணித் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவைத் தவிர, விஜித ஹேரத், செயலாளர் நிஹால் அபேசிங்க, செயற்குழு உறுப்பினர் பேராசிரியர் அனில் ஜயந்த ஆகியோரும் இலங்கையில் இருந்து வந்த குழுவில் உள்ளனர்.


மேலும் படிக்க | விமானத்திலும் ஜோடிகள் அட்ராசிட்டிஸ் - ஆணுறைகள், அழுக்கான உள்ளாடைகள் - பணியாளர் வேதனை


திஸாநாயக்கவின் வருகையின் முக்கியத்துவம்
தேசிய மக்கள் சக்தி (National People’s Power) கூட்டணியை வழிநடத்தும் ஜே.வி.பி தலைவர் திஸாநாயக்கவின் வருகை அரசியல் ரீதியில் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. 2022 ஆம் ஆண்டில் இலங்கையில் ஏற்பட்ட மிகவும் மோசமான பொருளாதார நெருக்கடியின் போது அவர் மக்கள் இயக்கத்தை வழிநடத்தியபோது உலக அளவில் கவனிக்கப்பட்டார்.


இந்த மக்கள் இயக்கத்தின் தாக்கத்தின் முன்னால், இலங்கையின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ தனது அதிகாரங்களைத் துறந்து நாட்டை விட்டே வெளியேற வைத்தது. இலங்கையில் அண்மையில் இன்ஸ்டிட்யூட் ஃபார் ஹெல்த் பாலிசி (Institute for Health Policy) நடத்திய சமீபத்திய கணக்கெடுப்பின்படி, இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள இலங்கை அதிபர் தேர்தலில்  திஸாநாயக்கவிற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.


இந்தக் கணக்கெடுப்பில் கலந்துக் கொண்டவர்களில் 50 சதவிகிதத்தினர், மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவுக்கு வாக்களிக்கப் போவதாக கூறியுள்ளனர். இவர் முன்னணியில் இருந்தால், இவரை அடுத்து,  33 சதவீத வாக்குகளைப் பெற்று சஜித் பிரேமதாச இரண்டாம் இடத்திலும், தற்போதைய அதிபர் ரணில் விக்கிரமசிங்க ஒன்பது சதவீதம் பெற்று மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.


அனுரகுமார திஸாநாயக்கவுக்கு சாதகமாக மக்கள் உணர்வுகள் இருக்கும் நிலையில், இந்த ஆண்டு இறுதிவாக்கில், இலங்கையில் நடைபெறவிருக்கும் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கூட்டணியில்  தேர்தலில் போட்டியிடுவார் என்பது உறுதி.


மேலும் படிக்க | Marriage Scam: மணப்பெண்களே மணமகன்களாகவும் மாறினால்? அதிர வைக்கும் வெகுஜன திருமண வீடியோ!


இலங்கையின் பொருளாதார வீழ்ச்சியின் எதிரொலியாக, சர்வதேச நாணய நிதியத்துடனான (IMF) கடன் பேச்சுவார்த்தைகள் பலனளிக்காத நிலையில், இந்தியா 3.8 பில்லியன் டாலர் மதிப்பிலான உதவிகளை வழங்கியது. இன்றைய சூழ்நிலையில், இலங்கையில் திசாநாயக்கா ஆட்சிக்கு வந்தால், இந்தியாவுடன் இணக்கமான உறவை அவர் ஏற்படுத்திவிடுவார் என்பது இலங்கையில் சீனாவின் ஆதிக்கத்தை குறைக்கும்.


இது இந்தியப் பெருங்கடல் பகுதியில் முக்கியமான இடத்தில் அமைந்துள்ள இந்தியாவின் அண்டை நாட்டுக்கும், இந்தியாவிற்கும் வர்த்தக மற்றும் அரசியல்ரீதியிலான ஆக்கப்பூர்வமான முடிவாக இருக்கும்.


இந்தியா சார்பு நிலைப்பாட்டை எடுத்திருக்கும் திசாநாயக்கவின் முடிவு என்பது, 80களின் பிற்பகுதியில் அவரது கட்சி எடுத்த நிலைப்பாட்டுடன் மாறுபட்டது.1987 முதல் 1990 வரையிலான காலகட்டத்தில் இந்திய-இலங்கை ஒப்பந்தத்திற்கு எதிராக, அவரது கட்சி இந்திய எதிர்ப்பு பிரச்சாரத்தை வழிநடத்தியது. 


தற்போது, கட்சியின் நிலைப்பாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை ஒப்புக்கொண்ட திஸாநாயக்க, இலங்கை எடுக்கும் எந்தவொரு முடிவும், இந்தியாவில் ஏற்படுத்தும் தாக்கத்தைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட வேண்டும் என்றும் கூறுகிறார்.


“எங்கள் நெருங்கிய அண்டை நாடான இந்தியா ஒரு முக்கிய அரசியல் மற்றும் பொருளாதார மையமாக மாறியுள்ளது என்பதை நாங்கள் அறிவோம். எனவே, பொருளாதார மற்றும் அரசியல் முடிவுகளை எடுக்கும்போது, அது இந்தியாவை எவ்வாறு பாதிக்கும் என்பதை நாங்கள் எப்போதும் கவனிப்போம்" என்று திசாநாயக்க கடந்த ஆண்டு தி ஹிந்து செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.  


மேலும் படிக்க | Grammy: கிராமி விருது வென்ற SHAKTI ஆல்பம்! சங்கர் மகாதேவனுக்கு விருது...


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ