விமானத்திலும் ஜோடிகள் அட்ராசிட்டிஸ் - ஆணுறைகள், அழுக்கான உள்ளாடைகள் - பணியாளர் வேதனை

Bizarre News: ஆணுறைகள், அழுக்கான உள்ளாடைகள் போன்றவைதான் தான் விமானத்திலேயே பார்த்த மிக மிக அருவருப்பான விஷயம் என ஒரு விமான பணியாளர் மனம் திறந்துள்ளார்.

Written by - Sudharsan G | Last Updated : Feb 4, 2024, 05:32 PM IST
  • சமூக வலைதளங்களில் தனது பணிகள் குறித்து விமான பணியாளர் பேசியுள்ளார்.
  • அதில் பல பகிரங்க தகவல்களை பகிர்ந்துள்ளார்.
  • மேலும், அதில் இருக்கும் கஷ்டங்கள் குறித்தும் அவர் தகவல் பகிர்ந்துள்ளார்.
விமானத்திலும் ஜோடிகள் அட்ராசிட்டிஸ் - ஆணுறைகள், அழுக்கான உள்ளாடைகள் - பணியாளர் வேதனை

World Bizarre News: சமூக வலைதளங்களில் எவை எப்படி எப்போது டிரெண்ட் ஆகும் என்பதை யாராலும் சரியாக கணிக்கவே முடியாது. டிரெண்டிங் ஒருபுறம் என்றாலும், சமூக வலைதளத்தில் பல விஷயங்கள் தினந்தினம் பேசுபொருளாகிறது. அந்த வகையில், சமூக வலைதளங்களில் சமீபத்தில் நடந்த சம்பவம் பலருக்கும் அதிர்ச்சியையும் வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

Add Zee News as a Preferred Source

ரெட்டிட் (Reddit) சமூகவலைதளத்தில் அமெரிக்க விமான நிறுவனத்தின் பணியாளர் என்ன விஷயத்தை வேண்டுமானாலும் கேட்கலாம் (Ask Me Anything) என பதிவிட்டிருந்தார். அப்போதுதான் அவரது பணியிடத்தின் கொடுமைகள் குறித்த கதைகள் தெரிவித்துள்ளார். அந்த பணியாளரின் பெயர் தெரிவிக்கப்படாத நிலையில், அவர் US Airline நிறுவனத்தில் பணியாற்றி வருவது மட்டும் தெரியவந்தது. 

அதில், ஒரு பயனர் அவரிடம்,"விமானத்தில் நீங்கள் பார்த்த மிக மிக அருவருப்பான விஷயம் என்ன?" என கேள்வியெழுப்பியிருந்தார். அதற்கு அவர், "பயன்படுத்தப்பட்ட ஆணுறைகள், அழுக்கான ஆண், பெண் உள்ளாடைகள் மற்றும் பயன்படுத்தப்பட்ட மாதவிடாய் உறைகள்" என அவர் தெரிவித்திருந்தார். 

மேலும் படிக்க | செயற்கை இறைச்சி... ஹலாலா... ஹராமா... சிங்கப்பூரில் நடக்கும் விவாதம்!

மேலும், இந்த கேள்வி - பதில் கலந்துரையாடலில் அவர் பல தகவல்களையும் பகிர்ந்துள்ளார். விமானத்தின் கழிவறையில் வாரம் ஒரு புகைப்பிடிக்கும் நபரை நாங்கள் கையும் கழவுமாக பிடிக்கிறோம்" என்றார். மேலும், இதுபோன்ற ஒழுக்கேடான பயணிகளால்தான் தங்களை போன்ற விமான பணியாளர்கள் மிகுந்த பணி அழுத்தத்திற்கு ஆளாவதாகவும் அவர் கூறினார். 

மேலும், யாரும் குடித்துவிட்டு விமானத்தில் பிரச்னை செய்வார்களா என அவரிடம் கேள்வி கேட்டதற்கு,"எப்போதும் இல்லை. ஒரு ஆறு மாதத்திற்கு ஒரு முறை யாராவது இப்படி செய்வார்கள் என்று சொல்லலாம். குறிப்பாக, அது நீங்கள் எந்த நகரத்திற்கு செல்கிறீர்கள் என்பதை பொறுத்தும் மதிப்பிடலாம். உதாரணத்திற்கு நீங்கள் லாஸ் வேகஸ் நகரில் இருந்து விமானத்தை செலுத்தும்பட்சத்தில் அங்கு நிறைய மது குடிக்காரர்கள் விமானத்தில் பயணிப்பார்கள்" என்றார். 

மேலும், நீங்கள் பணியின்போதோ அல்லது பணி முடித்த பின்னரோ உங்கள் பயணி உடனோ அல்லது உங்களுடன் பணிபுரிபவர்கள் உடனோ உறவில் இருந்துள்ளீர்களா என ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு,"பயணிகள் உடன் உறவில் இருந்தேன். பணியாளர்கள் உடன் என்றால் அதற்கான வாய்ப்பு இருந்தது, ஆனால் மறுத்துவிட்டேன்" என பதிலளித்தார். 

பயணிகள் தங்கள் இருக்கைகளிலேயே சண்டையிட்டுக்கொள்வது, மலம் கழிப்பது, சிறுநீர் கழிப்பது ஆகியவைதான் தனது வேலையில்தான் சந்தித்த மிக மோசமான அனுபவமாகும் என்றார். மேலும், சில பயணிகள் தன் மீது எச்சில் கூட துப்புவார்கள் என கூறினார். 

வீட்டை விட்டு மூன்று நாள்கள் தொடர்ச்சியாக செல்வது மற்றும் மோசமான பயணிகளை சந்திக்க நேர்வது ஆகியவை இந்த பணியின் கொடுமைகள் என்றால், பயணம், உடல்நலன் சார்ந்த பலன்கள், வேறு வேறு நகரங்களுக்கு செல்வது, தினந்தினம் புது புது விஷயங்களை எதிர்கொள்வது போன்றவை நல்ல அம்சமாகும் என்றும் அவர் கூறினார்.

மேலும் படிக்க | இஸ்லாமிய விதிமுறைகளை மீறிய திருமணம்: இம்ரான் கான் & மனைவிக்கும் ஏழாண்டு சிறை!

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News