வேலை நேரம் முடிந்த பிறகும் முதலாளியிடம் இருந்து SMS மற்றும் அழைப்புகள் ஏதேனும் வந்து தொந்தரவு செய்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போர்ச்சுக்கல் அரசு தெரிவித்துள்ளது. போர்ச்சுக்கல் பாராளுமன்றத்தில்  தொழிலாளர்கள் நலன் கருதி இப்படி ஒரு சட்டம் இயற்றப்பட்டு இருக்கிறது.   கொரோனா காலகட்டத்தில் தோன்றிய பொதுமுடக்கத்தின் காரணமாக பலரும் வீடுகளிலிருந்தே வேலை பார்த்து பார்த்து, தற்போது பலரின் வீடுகளும் ஒரு குட்டி அலுவலகமாகவே மாறிவிட்டது. இந்த தொழிலாளர்களை ஈர்க்கும் பொருட்டே இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது. வேலை நேரத்தை தவிர்த்து மற்ற நேரத்தில் முதலாளிகள் மெசேஜோ, போனோ செய்தால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


இந்த செய்தியினை கேட்டதும் பல தொழிலாளர்களுக்கு இன்ப அதிர்ச்சியும், பல முதலாளிக்கு பேரதிர்ச்சியும் ஏற்படும். வீட்டிலிருந்து வேலை பார்ப்பவர்கள் பலரது பொதுவான குற்றச்சாட்டு என்னவென்றால் இவர்களுக்கு போதிய அளவில் தனிமை கிடைப்பதே இல்லை. அதுமட்டுமல்லாது வீட்டிலிருந்து பணிபுரிவதால் எரிவாயு , இணையம், மின்சாரம் போன்றவற்றிற்கு அதிக கட்டணம் செலுத்த நேருகிறது. அதனால் அந்த கட்டணத்தையும் செலுத்த ஏதுவாக, முதலாளிகள் தொழிலாளிகளுக்கு கூடுதல் ஊதியம் வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 



போர்ச்சுகல் அரசாங்கம் பல புதுமைகளை இந்த சட்ட திட்டங்களில் புகுத்தி வீட்டிலிருந்து வேலை செய்பவர்களுக்கு ஒரு புதிய சூழலை ஏற்படுத்த முயற்சி செய்கிறது . மேலும் தொழிலாளர்களுக்கு இணைப்பை துண்டிக்கும் உரிமையையும் வழங்கியுள்ளது. மேலும் தொழிலாளர்கள் தனிமைப்படுத்தப்படுவதை தடுக்க முதலாளிகளை இரண்டு மாதத்திற்கு ஒரு முறையாவது நேரடியாக சந்திக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.   போர்ச்சுகல்லின் தொழிலாளர் மற்றும் சமூக பாதுகாப்பு துறை அமைச்சர் அனா மென்டிஸ் கொரோனவை பற்றி ஒன்று கூறியுள்ளார்.   "ஒழுங்குபடுத்தப்பட வேண்டியவேண்டியதை , ஒழுங்குபடுத்த வேண்டியதன் அவசியத்தை இந்த தொற்றுநோய் தெரியப்படுத்தியுள்ளது " என்று கூறியுள்ளார்.


ALSO READ ஐபோன்களை கண்காணித்த கூகுள் மீதான நடவடிக்கைக்கு பிரிட்டன் நீதிமன்றம் தடை


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR