உணவு, மின்சாரம் இன்றி தவிக்கும் மக்கள்... PoK பகுதியில் தீவிரமடையும் போராட்டம்!
பாகிஸ்தான் வரலாற்றில் இது வரை இல்லாத அளவிற்கு பணவீக்கம் அதிகரித்து, பெரும் பொருளாதார சவால்களை எதிர்கொண்டுள்ளது. இங்கு பொது மக்கள் அத்தியாவசிய உணவு மற்றும் பானங்களுக்கு அதிக விலை கொடுக்க வேண்டியுள்ளது.
பாகிஸ்தான் வரலாற்றில் இது வரை இல்லாத அளவிற்கு பணவீக்கம் அதிகரித்து, பெரும் பொருளாதார சவால்களை எதிர்கொண்டுள்ளது. இங்கு பொது மக்கள் அத்தியாவசிய உணவு மற்றும் பானங்களுக்கு அதிக விலை கொடுக்க வேண்டியுள்ளது. மக்கள் உணவின்றி தவிக்கும் நிலையில், சுத்தமான குடிநீரும் கூட கிடைக்காத அளவிற்கு நாட்டின் நிலைமை மோசமாகியுள்ளது. அதன் தாக்கம் இப்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் அதாவது PoK பகுதியிலும் காணப்படுகிறது. அங்கு முதியவர்கள் முதல் குழந்தைகள் வரை மக்கள் பட்டினியால் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால், அங்கே போராட்டங்கள் வெடித்துள்ளது. இந்நிலையில், அரசின் அலட்சிய போக்கை கண்டித்து மக்கள் தற்போது வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
உண்மையில், PoK பகுதியின் கில்கிட்-பால்டிஸ்தானில், மக்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களைக் கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், வேகமாக குறைந்து வரும் வேலை வாய்ப்புகள் மற்றும் அதிகரிக்கும் வேலையின்மை குறித்து மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது. இந்த எதிர்ப்புகளுக்கு மத்தியில், PoK பகுதியின் தலைவர் பாரிஸ்டர் சுல்தான் மஹ்மூத் சவுத்ரி இரண்டு வார பயணமாக வெளிநாடு சென்றதால் PoK பகுதியின் மக்களிடையே அதிருப்தி அதிகரித்தது. மேலும் அவர் பொதுமக்களின் பிரச்சனைகளில் அக்கறை காட்டாமல், சுக வாழ்க்கை வாழ்கிறார் என மக்கள் குற்றசாட்டு வைத்துள்ளனர்.
மேலும் படிக்க | உணவில்லாமல் வாடும் மக்கள்! ஆடம்பரமாய் வாழும் நவாப்கள்! பாகிஸ்தானின் அவல நிலை!
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், கில்கிட்-பால்டிஸ்தான் ஆகிய பகுதிகளில் கோதுமை மாவு, பருப்பு வகைகள், மின்சாரம் சப்ளை போன்ற கோரிக்கைகளுக்காக மக்கள் தெருக்களில் போராட்டம் நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வேகமாக அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் வேலையின்மைக்கு எதிராக PoK மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பாகிஸ்தானும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் நேரத்தில் இந்த போராட்டங்கள் நடக்கின்றன. நாட்டில் வெள்ளம் மற்றும் உணவு நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள PoK குடிமக்கள், நீண்ட காலமாக அனைத்து மட்டங்களிலும் செயல்படாத தலைமையின் காரணமாக பிரச்சனையை சந்தித்து வருகின்றனர்.
மக்கள் கொந்தளிக்கும்போது பாகிஸ்தான் தலைவர்கள் வெளிநாடுகளுக்கு ஓடுகிறார்கள். PoK தலைவர் பாரிஸ்டர் சுல்தான் மஹ்மூத் சவுத்ரி துருக்கி, இங்கிலாந்து மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகளுக்கு இரண்டு வார பயணமாக சென்றார். இந்தச் செய்தி வெளியில் வந்தவுடன், அத்தியாவசிய பொருட்கள் கூட கிடைக்காமல் வீதியில் இறங்கிப் போராடிய மக்களை, இந்தச் செய்தி மேலும் ஆத்திரமூட்டுவதாக இருந்தது.
மேலும் படிக்க | பாகிஸ்தான் நாணய மதிப்பில் வரலாறு காணாத வீழிச்சி: பொருளாதார நெருக்கடியில் பாகிஸ்தான்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ