கலவர பூமியாகும் மியான்மார்; Aung San Suu Kyi கட்சி அதிகாரி போலீஸ் காவலில் மரணம்
நீண்ட நாட்களாக ஜனநாயகத்தை மீட்க போராட்டம் நடைபெற்று வருகின்றன. போராட்டத்தை ஒடுக்கும் நடவடிக்கையாக, சமூக ஊடகங்கள் முதலில் தடை செய்யப்பட்டன. பின்னர் இணைய சேவையும் முடக்கப்பட்டது. எனினும் போராட்டம் தொடர்ந்து நடைபெறுகிறது.
மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த பொதுத்தேர்தலில் அந்நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயக கட்சி வெற்றி பெற்றது.
ஆனால் அந்த நாட்டு ராணுவம் தேர்தலில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்ததாக குற்றம் சாட்டியதோடு, தேர்தல் முடிவுகளை ஏற்க மறுத்தது. ஆனால் ராணுவத்தின் குற்றச்சாட்டு ஆதாரமற்றவை என கூறி தேர்தல் ஆணையம் நிராகரித்தது.
எனினும் மியான்மரின் (Myanmar) ராணுவத்திற்கும் அரசுக்கு இடையே மோதல் போக்கு நீடித்து வந்த நிலையில், சமீபத்தில் ராணுவம் அதிரடியாக ஆட்சியை கைப்பற்றியது. நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் உள்பட பல முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கிய அரசு அதிகாரிகளை ராணுவம் கைது செய்தது.
அதை அடுத்து, நீண்ட நாட்களாக ஜனநாயகத்தை மீட்க போராட்டம் நடைபெற்று வருகின்றன. போராட்டத்தை ஒடுக்கும் நடவடிக்கையாக, சமூக ஊடகங்கள் முதலில் தடை செய்யப்பட்டன. பின்னர் இணைய சேவையும் முடக்கப்பட்டது. எனினும் போராட்டம் தொடர்ந்து நடைபெறுகிறது.
இந்நிலையில், பதவி நீக்கம் செய்யப்பட்ட மியான்மர் தலைவர் ஆங் சான் சூகி கட்சியைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் பொலிஸ் காவலில் மரணமடைந்தார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
பதவி நீக்கம் செய்யப்பட்ட மியான்மர் தலைவர் ஆங் சான் சூகி கட்சியைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் போலீஸ் காவலில் இறந்தார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
கின் மவுங் லட்டின் (Khin Maung Latt) மரணத்திற்கான காரணம் தெரியவில்லை என்றாலும், தலையில் இரத்தக் கறை படிந்த துணியால் மூடப்பட்டிருந்தது என ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
கலைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சித்து மவுங் என்பவர் தனது பேஸ்புக் பதிவில், கின் மவுங் லாட் தனது பிரச்சார மேலாளராக இருந்தார் என்றும், சனிக்கிழமை இரவு யாங்கோனின் பபேடன் மாவட்டத்தில் கைது செய்யப்பட்டார் என்றும் பதிவிட்டுள்ளார்.
தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மாரில், போராட்டங்களை முடக்குவதற்காக பாதுகாப்புப் படையினர் 50 க்கும் மேற்பட்டவர்களைக் கொன்றதாக ஐக்கிய நாடுகள் சபையும் தெரிவித்துள்ளது.
ALSO READ | கலவர பூமியான மியான்மார்; ராணுவத்தின் அடக்குமுறையை மீறி தீவிரமடையும் போராட்டம்
அரசியல் கைதிகளுக்கான உதவி அமைப்பு ஒன்று, சனிக்கிழமைக்குள் 1,700 க்கும் மேற்பட்டோர் இராணுவத்தினால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும், அவர்களை இராணுவத்தினர் பூட்ஸ் காலால் உதைக்கப்பட்டனர், போலீஸ் தடியால் தாக்கப்பட்டனர், போலீஸ் வாகனங்களில் தர தர வென இழுத்துச் செல்லப்பட்டனர் என்றும் கூறியுள்ளது.
இந்த சம்பவங்கள் மேற்கு நாடுகளில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஆசியாவின் பெரும்பாலான ஜனநாயக நாடுகள் இதற்கு கண்டனம் செய்யப்பட்டுள்ளன. அமெரிக்காவும் வேறு சில மேற்கத்திய நாடுகளும் மியான்மார் மீது சில பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
ALSO READ | மியான்மரில் பேஸ்புக்கை தொடர்ந்து ட்விட்டர், இன்ஸ்டாகிராமையும் முடக்கியது ராணுவம்
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR