ரூ.2 லட்சம் மதிப்புள்ள ஷூ மற்றும் பைகளை கடித்து குதறிய முயல்!
ஆறு மாத பின்ஸ்(Binx) என்கிற ஒரு முயல் குட்டி ஒன்றை வளர்த்து வருகிறார் சாரா. சமீபத்தில் இந்த முயல் ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தின்றுவிட்டது.
இங்கிலாந்து : இங்கிலாந்தில், டெர்பியை சேர்ந்த சாரா ஹோல்லிங் என்ற பெண்மணி, முயல் வளர்ப்பினால் சில இன்னல்களை சந்திக்க நேர்ந்துள்ளது. ஆறு மாத பின்ஸ்(Binx) என்கிற ஒரு முயல் குட்டி ஒன்றை வளர்த்து வருகிறார் சாரா. சமீபத்தில் இந்த முயல் ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தின்றுவிட்டது. மேலும் விமான பணிப்பெண்ணான அவர் பின்ஸை கூண்டுக்குள் அடைக்க மறந்துவிட்டார். சிறிது நேரத்திற்கு பின்னர் தான் அவருக்கு இந்த விஷயம் நினைவிற்கு வந்துள்ளது. அதனை அவர் உணர்வதற்குள்ளேயே அவரது செல்ல முயல் விலையுயர்ந்த கியர்களை மென்று அழித்துவிட்டது.
விலையுயர்ந்த Alexander McQueen ஷூக்கள், Louis Vuitton கைப்பைகள் போன்றவற்றை நாசமாக்கிவிட்டன. அந்த பொருட்களின் மதிப்புகள் நம் இந்திய மதிப்புக்கு கிட்டத்தட்ட ரூ.2 லட்சம் ருபாய் ஆகும். அந்த முயல் மிகவும் சிறிய அளவிலான ,அழகான ஒரு முயல். ஆனால் எந்த அளவுக்கு அழகு இருக்கிறதோ அந்த அளவிற்கு ஆபத்தும் நிறைந்ததாக உள்ளது.
அந்த விலையுயர்ந்த பொருட்களை முயல் சாப்பிட்டபோது வெளிப்படுத்துவதற்கு என்னிடம் வார்த்தை இல்லை. ஆனால் முயலுக்கு விலையுயர்ந்த சுவையான பொருட்கள் கிடைத்திருப்பதாகவும் நகைச்சுவையாக கூறியுள்ளார். அது மட்டுமல்லாது அந்த முயல் செய்த விசித்திரமான செயல் ஒன்றையும் நினைவு கூர்ந்துள்ளார். அதாவது அந்த முயல் சாராவின் தலைமுடியை 20 கிராம் அளவிற்கு தின்றுவிட்டதாம். உடனே கால்நடை மருத்துவரை தொடர் கொள்ளவே, வீட்டிற்கு வந்த மருத்துவர் சாராவை விட அதிகமாக அதிர்ச்சியாகி இருக்கிறார்.
இனி விலையுயர்ந்த பொருட்கள் வாங்குவது பற்றி எப்போதும் யோசிக்கவே போவது இல்லை. மேலும் விலையுயர்ந்த பொருட்களை வைப்பதற்கென தனி அலமாரி ஒன்றினை வடிவமைத்து அதற்கென பூட்டையும் தயார் செய்துவிட்டேன். என்னதான் அந்த முயல் பல பொருட்களை அழித்தாலும், அவரால் அந்த முயலை விட்டு கொடுக்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.
ALSO READ டைப்பிங் மிஸ்டேகால் சிறை சென்ற அரசியல்வாதியின் மனைவி
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR