டைப்பிங் மிஸ்டேகால் சிறை சென்ற அரசியல்வாதியின் மனைவி

துருக்கி நாட்டில் ஒரு மருத்துவ அறிக்கையில் ஒரு பெண் செய்த தவறுக்காக  அவர் சிறைக்கு அனுப்பப்பட்டார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 13, 2021, 04:35 PM IST
டைப்பிங் மிஸ்டேகால் சிறை சென்ற அரசியல்வாதியின் மனைவி title=

பல வித தவறுகளை செய்துவிட்டு பலர் தப்பித்துக்கொள்கிறார்கள். ஆனால், ஒரு தட்டச்சுப் பிழைக்காக ஒரு அரசியல்வாதியின் மனைவி சிறை சென்ற சம்பவம் அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

தட்டச்சு செய்வதில் எழுத்துப் பிழை ஏற்பட்டால், பெரும்பாலான நாடுகளில் அதற்கு மன்னிப்பு கேட்கப்படும் அல்லது அது ஒரு சிறிய தவறாகவே கருதப்படும்.

ஆனால் துருக்கி (Turkey) நாடு இந்த விஷயத்தில் விதிவிலக்காக இருக்கிறது. இங்கு, ஒரு மருத்துவ அறிக்கையில் ஒரு பெண் செய்த தவறுக்காக  அவர் சிறைக்கு அனுப்பப்பட்டார்.

கணவனின் செல்வாக்கு பலிக்கவில்லை

விஷயம் வெளியே வந்ததும், சம்பந்தப்பட்ட பெண் சட்டப்படி நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஊடகங்களில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, குற்றம் சாட்டப்பட்ட பெண் ஒரு அரசியல்வாதியின் மனைவி ஆவார்.

இந்த பெண்ணின் கணவர் அதிக செல்வாக்கு உள்ளவர். இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டதும், கணவர் இந்த விசாரணையில் குறுக்கிட முடிவெடுத்தார். ஆனால், அவரது செல்வாக்கும் இங்கு பலிக்கவில்லை.

கருக்கலைப்பு (Abortion) தொடர்பான மருத்துவ அறிக்கையில் ஏற்பட்ட தவறுக்காக அரசியல்வாதியின் மனைவிக்கு இரண்டரை வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ALSO READ: ஹூவர் அணை மீது காற்றில் மிதக்கும் பொருட்கள்; புவிஈர்ப்பு விசை தோற்றுப் போவது ஏன்..!!

தியர்பாகிர் (Diyarbakir) நீதிமன்றம் ஒன்று அவருக்கு 30 மாதங்கள் அதாவது இரண்டரை ஆண்டுகளுக்கான கடுங்காவல் தண்டனையை விதித்துள்ளது.

இந்த வழக்கு 2015 ஆம் ஆண்டில் டெமிர்டாஸ் என்ற பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கருச்சிதைவு ஏற்பட்டது. அப்போது இரண்டு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன. இந்த வழக்கு அப்போது எடுக்கப்பட்ட மருத்துவ விடுப்பு தொடர்பானது.

ஐந்து நாட்களுக்கான மருத்துவ விடுப்புக்கான மருத்துவரின் மருந்துச்சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள தேதியில் ஏற்பட்ட தவறு மூலம் இந்த மோசடி நடந்ததாக இந்த வழக்குடன் வழக்கறிஞர் (Lawers) தெரிவித்துள்ளார். மருத்துவமனையின் மருந்துச்சீட்டில், அவர் டிசம்பர் 11, 2015 தேதியை எழுத வேண்டியிருந்தது, ஆனால், அவர் அந்த துண்டுச்சீட்டில் டிசம்பர் 14 என்று தவறாக எழுதியிருந்தார்.

ALSO READ: வேலை நேரத்திற்கு பிறகு முதலாளி தொந்தரவு செய்தால் சட்ட விரோத தண்டனை!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News