முத்து மாலையாய் நேர்கோட்டில் அணிவகுத்து நிற்கும் கோள்கள்: வானில் ஒரு அதிசய நிகழ்வு
Rare planetary conjunction: பதினெட்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த நிகழ்வு நடைபெறுகிறது. நேற்று காணப்படத் தொடங்கிய இந்த நிகழ்வை இன்னும் நான்கு நாட்கள் வரை வானில் காணலாம் என்றும் வானியற்பியல் ஆய்வக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
நியூயார்க்: நமது சூரிய மண்டலத்தில் உள்ள ஐந்து முக்கிய கிரகங்களான புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன் மற்றும் சனி ஆகியவை ஒரே நேர்கோட்டில் இருக்கும் அரிய கிரக இணைப்பு ஏற்பட்டுள்ளது. இது மனித கண்களுக்குத் தெரியும் என்பது கூடுதல் செய்தி.
பதினெட்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த நிகழ்வு நடைபெறுகிறது. நேற்று காணப்படத் தொடங்கிய இந்த நிகழ்வை இன்னும் நான்கு நாட்கள் வரை வானில் காணலாம் என்றும் வானியற்பியல் ஆய்வக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த அறிய நிகழ்வை அதிகாலை வேளையில், தெளிவான வானத்தில், கிழக்கு திசை அடிவானத்தில் காணலாம்.
பொதுவாக சூரியனின் பிரகாசமான ஒளியால் பார்வையில் இருந்து மறைக்கப்படும் புதனைப் பார்ப்பதற்கு இது ஒரு சிறப்பு வாய்ப்பு என்று பிபிசி வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | நிலவு துகள்கள், கரப்பான்பூச்சிகள் ரூ.4 கோடிக்கு ஏலம்; மறுத்து முரண்டுபிடிக்கும் நாசா
இந்த இணைப்பு வெள்ளிக்கிழமை காலை பிரகாசமாக இருந்தது. எனினும், உலகின் பெரும்பாலான பகுதிகளில் இருந்து திங்கள் வரை இது தெரியும்.
இப்படிப்பட்ட இணைப்பு இதற்கு முன்னதாக 2004 இல் நடந்தது. மேலும் இது 2040 வரை மீண்டும் காணப்படாது என்று அறிக்கைகளில் கூறப்பட்டுள்ளது.
கோள்கள் "அடிவானத்திற்கு அருகாமையில் பரவியிருக்கும் முத்துகளின் சரம் போல்" தோன்றுகின்றன என்று விண்வெளி விஞ்ஞானியும், பிரபல வானியல் கழகத்தின் தலைமை நட்சத்திரப் பார்வையாளருமான பேராசிரியர் லூசி கிரீன் விளக்குகிறார்.
கோள்கள் சூரியனிலிருந்து அமைந்த வரிசையில் தோன்றுவதால் இதுவும் இந்த நிகழ்வின் ஒரு சிறப்பு அம்சமாக பார்க்கப்படுகின்றது.
வெள்ளிக்கிழமையன்று, வெள்ளி மற்றும் செவ்வாய் கிரகங்களுக்கு இடையே ஒரு பிறை நிலவும் வரிசையில் சேர்ந்தது.
மேலும் படிக்க | Sunspot AR30398: பூமியை மிக மோசமாக தாக்கும் சூரிய எரிப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR