பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை துப்பாக்கியால் சுட்டவர் அளித்த வீடியோ வாக்குமூலம் வெளியாகியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரும், மூத்த கிரிக்கெட் வீரருமான இம்ரான் கான் மீது நேற்று மாலையில், ஒருவர் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினார். இதில், அவரது காலில் பலத்த காயம் ஏற்பட்டதை தொடர்ந்து, அவர் தற்போது சிகிச்சையில் இருந்து வருகிறார். 


இம்ரான் மட்டுமில்லாமல் அவரது இரண்டு உதவியாளர்களின் கைகளிலும், முகத்திலும் காயம் ஏற்பட்டுள்ளது. கூட்டத்தில் பங்கேற்ற பலரும் நெரிசலால் படுகாயமடைந்தனர். இம்ரான் கானை துப்பாக்கியால் சுட்ட நபரை போலீசார் உடனடியாக கைதுசெய்தனர்.


இம்ரான் கான் தற்போது அவரது கட்சியினருடன் சேர்ந்த லாகூர் முதல் தலைநகர் இஸ்லாமாபாத் நோக்கி, பேரணி ஒன்றை நடத்தி வருகிறார். இந்த பேரணி, லாகூரில் இருந்து 70 கி.மீ., தொலைவில் உள்ள குஜ்ரன்வாலா மாவட்டத்தின் வாஸிராபாத் நகரை இம்ரான் அடைந்தபோதுதான், இந்த துப்பாக்கிச்சூடு நிகழ்வு நடந்துள்ளது. 



மேலும் படிக்க | Firing on Imran Khan: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது துப்பாக்கிச்சூடு


இதைத்தொடர்ந்து, கைதுசெய்யப்பட்டவர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அவரது பெயர் முகமது நவீத் என அடையாளம் காணப்பட்டுள்ளார். மேலும், இம்ரான் கான் மீது இருவர் துப்பாக்கிச்சூடு நடத்த திட்டமிட்டதாக போலீசார் தெரிவிக்கின்றனர். 


அதில், ஒருவர் பிஸ்டல் உடனும், மற்றொருவர் ஆட்டோமேட்டிக் ரக ரைஃபிள் உடனும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், முகமது நவீதை போலீசார் கைது செய்த நிலையில்,  ரைஃபிள் வைத்திருந்த நபரை இம்ரான் கானின் ஆதரவாளர்களும், பேரணியில் பங்கேற்றவர்கள் சேர்ந்து அடித்து கொன்றுவிட்டதாக கூறப்படுகிறது. உயிரிழந்தவரின் பெயர் ஃபைசல் பட் எனவும் தெரிவிக்கப்படுகிறது.


மேலும் போலீசாரால் கைதான நவீத், சம்பவம் நடந்த வஸிராபாத் தாலுகாவில் உள்ள சோத்ரா என்று சிறு நகரத்தை சேர்ந்தவர் தெரிவிக்கப்பட்டுள்ளது. நவீத்திடம் இருந்து 9 மி.மீ., பிஸ்டல் கைப்பற்றப்பட்டது. நவீத்தின் தந்தை பெயர் முகமது பஷீர் என்றும், இவர் பஞ்சாபி விவசாய பழங்குடியான அரைன் சமூகத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது. 


இந்த சமூகம் பாகிஸ்தானின் பஞ்சாப் மற்றும் சிந்த் மாகாணத்தில் அரசியல் அடையாளத்திலும், அமைப்பிலும் வலுவானது என்ற தெரிவிக்கப்படுகிறது. முன்னாள் பிரதமர் இம்ரான் கான் நியாசி பஸ்துன் எனும் பழங்குடி இனத்தைச் சார்ந்தவர்.  



இந்த சம்பவம் குறித்து கைதானா நவீத் போலீசாரிடம் வீடியோ வாக்குமூலம் அளித்துள்ளார். அதில்,'மக்களை இம்ரான் கான் தவறான பாதையில் வழிநடத்துகிறார். அதனால்தான் அவரை கொலை செய்ய முயற்சித்தேன்' என கூறியுள்ளார். மேலும், தான் இருச்சக்கர மோட்டர் வாகனம் மூலம் அப்பகுதிக்கு வந்ததாகவும்,  அங்குள்ள உறவினரின் கடையில் வாகனத்தை நிறுத்திவிட்டு சம்பவ இடத்திற்கு வந்ததாக தெரிவித்தார்.


தன்னுடைய செயலுக்கு பின்னால் யாரும் இல்லை என்றும் தனியாகவே இதை திட்டமிட்டதாகவும் நவீத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 


கடந்த ஏப்ரல் மாதம் இம்ரான் கானிடம் இருந்து பிரதமர் பதவி பறிபோன நிலையில், மீண்டும் முறையாக தேர்தல் நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி தற்போதைய அரசை எதிர்த்து இம்ரான் கான் இந்த பேரணியை மேற்கொண்டுவருவது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க | மீண்டும் இலங்கையில் நெருக்கடி; வீதிகளில் திரளும் மக்கள்; ஒடுக்க நினைக்கும் அரசு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ