Firing on Imran Khan: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது துப்பாக்கிச்சூடு

Firing on Imran Khan: அரசுக்கு எதிரான ஊர்வலத்தின்போது பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

Written by - S.Karthikeyan | Last Updated : Nov 3, 2022, 06:09 PM IST
  • பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது துப்பாக்கிச்சூடு
  • அரசு பதவி விலகக்கோரி நடத்திய பேரணியில் அதிர்ச்சி சம்பவம்
  • காயமடைந்த அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதி
Firing on Imran Khan: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது துப்பாக்கிச்சூடு title=

Pakistan Former PM Imran Khan Shot in Rally: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பாகிஸ்தானின் குஜ்ரன்வாலாவில் தனது பேரணியில் பங்கேற்றிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரது வலது காலில் காயம் ஏற்பட்டிருப்பதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாகிஸ்தானில் இப்போது இருக்கும் ஷேபாஸ் ஷெரீப் அரசாங்கத்திற்கு எதிராக இம்ரான் கான் நாடு முழுவதும் மிகப்பெரிய பேரணியை நடத்தி வருகிறார். ஷோபாஸ் ஷெரீப் பதவியில் இருந்து விலக வேண்டும் என வலியுறுத்தி வரும் அவர், இன்று நடைபெற்ற பேரணியில் பங்கேற்று உரை நிகழ்த்தவிருந்தார். அதற்காக அவர் கண்டெய்னர் டிரெக்கின் மேற்புறத்தில் ஏறி நின்று கொண்டிருந்தார். அந்த நேரத்தில் ஏற்கனவே கூட்டத்தில் ஒருவராக மறைந்திருந்த பெண் ஒருவர் இம்ரான் கானை துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | குரங்கம்மை முடிவுக்கு வரவில்லை: அவசர சுகாதாரநிலை பட்டியலில் தொடரும் Monkeypox

 

இதில் காயமடைந்த இம்ரான்கான் சிகிச்சைக்காக மருத்துவமனைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். அவருடன் கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் காயமடைந்ததாக முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன. எனினும் அவருடைய உயிருக்கு ஆபத்தில்லை என கூறப்படுகிறது. 2007 ஆம் ஆண்டு பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசீர் பூட்டோ இதேபோன்ற ஒரு பேரணியின்போது துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டார். அந்த சம்பவத்தை நினைவு கூறும் விதமாக இம்ரான்கான் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவம் அமைந்துள்ளது. 

இம்ரான்கான் கட்சியின் அதிகாரபூர்வ டிவிட்டர் பக்கத்தில் அவர் உரைநிகழ்த்துவதற்காக கண்டெய்னர் டிரெக் மீது ஏறும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. துப்பாக்கிசூடு நடந்தவுடன் அப்பகுதியில் களேபரக்காடாக மாறியது. மக்கள் கூட்டம் அலறியடித்து ஓடத் தொடங்கியது. பாகிஸ்தான் பிரதமராக இருந்த இம்ரான்கான் அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியை தழுவி, பிரதமர் பதவியில் இருந்து விலகினார். அன்று முதல் பாகிஸ்தானில் புதியதாக பொறுப்பேற்றிருக்கும் அரசு பதவி விலக வலியுறுத்தி, பல்வேறு போராட்டங்களையும் முன்னெடுப்புகளையும் மேற்கொண்டு வருகிறார். இதனால், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. 

மேலும் படிக்க | மீண்டும் இலங்கையில் நெருக்கடி; வீதிகளில் திரளும் மக்கள்; ஒடுக்க நினைக்கும் அரசு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News