புதுடெல்லி: நாம் வசிக்கும் பூமி நீல கிரகம் என்று அழைக்கப்படுகிறது. அதன் மேற்பரப்பின் பெரும்பகுதி பெருங்கடல்களைக் கொண்டுள்ளது.கடல்கள் ஆக்ரமித்ததைத் தவிர எஞ்சியுள்ள பூமியின் பகுதியில் மனிதர்களான வசிக்கிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நீரின்றி அமையாது உலகு என்பது உண்மையான விஷயம். உலகளாவிய காலநிலையை ஒழுங்குபடுத்துவதில் பெருங்கடல்கள் மற்றும் கடல் நீரோட்டங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.


அவை பூமி கிரகத்தை குளிர்ச்சியாகவும் சூடாகவும் வைத்திருக்கின்றன. தாதுக்கள் மற்றும் எண்ணெய் வளம் என பெருங்கடல்கள் வளமானவை. நவீன உலகப் பொருளாதாரத்திற்கு கடல்களின் பங்கு மிகவும் முக்கியமானது.


மேலும் படிக்க | பசிபிக் பெருங்கடலின் கடல் தளத்தில் மர்மமான மஞ்சள் செங்கல் பாதை


கடலில் உள்ள வளங்கள் மட்டுமல்ல, போக்குவரத்துக்கும் கடலின் பயன்பாடு ஆதிகாலம் தொட்டே இன்றியமையாததாக இருந்துள்ளது. கடற்கரைகளில் அமைந்துள்ள நகரங்களே மிகப்பெரிய வர்த்தக நகரங்களாக மாறியுள்ளன.


ஆனால், துரதிருஷ்டவசமாக கடலில் வாழ்ந்துவந்த 90 சதவீத பெரிய மீன்களும் 50 சதவீத பவளப்பாறைகளும் அழிந்துவிட்டன. இது நமது கிரகத்திற்கு நல்லதல்ல. எனவே, உலகப் பெருங்கடல் தினத்திற்கு ஐக்கிய நாடுகள் சபை அதிக முன்னுரிமை அளித்துள்ளது. 



"உலகப் பெருங்கடல் தினம் அன்றாட வாழ்வில் கடல்கள் வகிக்கும் முக்கியப் பங்கை ஒவ்வொருவருக்கும் நினைவூட்டுகிறது. அவை நமது கிரகத்தின் நுரையீரல் மற்றும் உணவு மற்றும் மருந்தின் முக்கிய ஆதாரம் மற்றும் உயிர்க்கோளத்தின் முக்கிய பகுதியாகும். இந்த நாளின் நோக்கம் கடலில் மனித செயல்களின் தாக்கம், கடலுக்கான குடிமக்களின் உலகளாவிய இயக்கத்தை உருவாக்குதல் மற்றும் உலகப் பெருங்கடல்களின் நிலையான மேலாண்மைக்கான திட்டத்தில் உலக மக்களை அணிதிரட்டுதல் மற்றும் ஒன்றிணைத்தல்" என்று ஐக்கிய நாடுகள் சபை கூறுகிறது.


மேலும் படிக்க | தனுஷ்கோடியில் 20 அடிக்கு மேல் ஆக்ரோஷத்துடன் எழும் கடல் அலைகள்


உலகில் ஏற்பட்ட அனைத்து முன்னேற்றங்களுக்கும், கடல் பாதைகளே தடம் அமைத்துக் கொடுத்தன என்பது வரலாறு. கப்பல்களின் போக்குவரத்து இல்லாவிட்டால் கண்டங்கள் அனைத்தும் தனித்தீவாகவே இருந்திருக்கும். 


உலகப் பெருங்கடல் தினத்தை கொண்டாடுவது உயிருள்ள, சுவாசிக்கும் உடலுக்குப் பொருத்தமானது, கடல் இல்லை என்றால் இல்லாமல் மனிதர்கள் உயிர்வாழ முடியாது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த கடலை மதிப்போம்.


2022 ஆம் ஆண்டு உலகப் பெருங்கடல் தினத்திற்காக, ஆண்டு நிகழ்வின் முதல் கொண்டாட்டத்தை ஐநா ஏற்பாடு செய்கிறது. நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளின் தலைமையகத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. நிகழ்ச்சி நேரலையாகவும் ஒளிபரப்பப்படும்.


2022 ஆம் ஆண்டின் உலகப் பெருங்கடல் தினத்தின் கருப்பொருள் " கடல்களுக்கு புத்துயிரூட்டும் உலகளாவிய கூட்டு நடவடிக்கை..." என்பதாகும்.


மேலும் படிக்க | புதிய சோஷியல் மீடியா தளத்தை தொடங்குகிறாரா எலான் மஸ்க்? அவரே கூறிய பதில்


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR