டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் தனது நிறுவனம் 2024 ஆம் ஆண்டுக்குள் ஸ்டீயரிங் வீல் அல்லது பெடல்கள் இல்லாத ரோபோடாக்ஸியை வெளியிட திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உலகின் மிகப்பெரிய மின்சார-வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லா, மார்ச் காலாண்டில் 3.3 பில்லியன் அமெரிக்க டாலர் நிகர லாபத்தைப் பதிவு செய்ததை அடுத்து இந்த அறிவிப்பு வந்துள்ளது.


நிறுவனத்தின் காலாண்டு வருவாய் $18.8 பில்லியனாக இருந்தது. இது $17.9 பில்லியன் மதிப்பீட்டை முறியடித்தது. ஆண்டுக்கு ஆண்டு தொகையில் 81 சதவீதம் அதிகரித்துள்ளது. $2.27க்கான எதிர்பார்ப்புகளுடன் ஒப்பிடுகையில், ஒரு பங்கின் வருவாய் $2.86 ஆக இருந்தது.


இந்த டாக்சியில் சவாரி செய்வதற்கான செலவு ஒரு மானியம் வழங்கப்படும் சுரங்கப்பாதை டிக்கெட்டின் அளவில் இருக்கும் என்றும் மஸ்க் கூறினார். டெஸ்லா விலையுயர்ந்த மின்சார கார்களை விற்பனை செய்வதில் பெயர் பெற்றுள்ளதால், ரோபோடாக்சியை நிறுவனம் எவ்வளவு மலிவான விலையில் விற்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


“ ஒரு மைலுக்கு ஆகும் செலவு, ஒரு கிலோமீட்டருக்கு ஆகும் செலவு என அனைத்தையும் கருத்தில் கொண்டு முடிவுகள் எடுக்கப்படும்” என மஸ்க் குறியதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 


"அது உண்மையில் டெஸ்லாவின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய உந்துதலாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்." என்றார் மஸ்க்


டெஸ்லா ரோபோடாக்ஸியில் "பிற கண்டுபிடிப்புகளின் பங்களிப்பு" இருக்கும் என்று மஸ்க் கூறினார். எனினும், இதன் முழுமையான விவரங்களை அவர் விவரிக்கவில்லை.


மேலும் படிக்க | WikiLeaks அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்படும் ஜூலியன் அசாஞ்சே அடுத்து என்ன 


இந்த மாத தொடக்கத்தில் டெஸ்லாவின் ஆஸ்டின் ஜிகாஃபாக்டரி திறப்பு விழாவில் ரோபோடாக்ஸி பற்றி மஸ்க் முதன்முதலில் குறிப்பிட்டார். அங்கு டெஸ்லாவின் மனித உருவ ரோபோ கான்செப்ட் ஆப்டிமஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்கால தயாரிப்புகளை அவர் கோடிட்டுக் காட்டினார்.


டெஸ்லாவின் பெரும்பாலான லாபம் அதன் பயணிகள் கார் வணிகஹ்திலிருந்து வௌகிறது. தற்போது நிறுவனம், இதைத்  தாண்டி மற்ற பிரிவுகளில் அடி எடுத்து வைக்க தயாராக உள்ளது. 


"ஆப்டிமஸ் கார் வணிகத்தை விட அதிக மதிப்புடையதாக இருக்கும், மேலும் FSD ஐ விட அதிக மதிப்புடையதாக இருக்கும்," என்று அவர் கூறினார்.


டெஸ்லா சப்ளை-செயின் சிக்கல்களால் பாதிக்கப்பட்டுள்ளது. அதன் தொழிற்சாலைகள் கடந்த பல காலாண்டுகளாக திறன் குறைவாக இயங்கி வருகின்றன.


டெஸ்லாவின் ஷாங்காய் ஜிகாஃபாக்டரி, கடந்த ஆண்டு நிறுவனத்தின் உலகளாவிய உற்பத்தியில் பாதிக்கு காரணமாக இருந்தது. சீனாவில் கோவிட்-19 தொற்று அதிகரிப்பால் இது பாதிக்கப்பட்டுள்ளது.


எனினும் உள்ளூர் அதிகாரிகள் சில கட்டுப்பாடுகளை தளர்த்த முடிவு செய்த பிறகு, உற்பத்தியின் அளவீட்டு மறுதொடக்கம் தொடங்கியது.


மேலும் படிக்க | Elon Musk Vs Twitter: டிவிட்டர் Poison pill உத்தியை கடைபிடிப்பது ஏன் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR