எலன் மஸ்க்கால் ட்விட்டர் நிறுவனத்தில் சலசலப்பு...ஊழியர்கள் பணயக் கைதிகளா?

டெஸ்லா நிறுவனத் தலைவர் எலான் மஸ்க்கால் ஏற்பட்டுள்ள சலசலப்பைக் கண்டு கலக்கமடையாமால் ஊழியர்கள் வேலையில் கவனம் செலுத்துமாறு அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி பராக் அகர்வால் கேட்டுக் கொண்டுள்ளார்.

Written by - Chithira Rekha | Last Updated : Apr 15, 2022, 11:37 AM IST
  • எலன் மஸ்க் அறிவிப்பால் ட்விட்டர் ஊழியர்கள் கலக்கம்
  • வேலையில் கவனம் செலுத்துங்கள்
  • ஊழியர்களுக்கு ட்விட்டர் சிஇஓ அறிவுரை
எலன் மஸ்க்கால் ட்விட்டர் நிறுவனத்தில் சலசலப்பு...ஊழியர்கள் பணயக் கைதிகளா? title=

டெஸ்லா நிறுவன தலைவர் எலன் மஸ்க் அண்மையில் ட்விட்டர் நிறுவனத்தின் 9 சதவீத பங்குகளை வாங்கினார். இதனைத் தொடர்ந்து, ட்விட்டர் நிறுவன இயக்குநர்கள் குழுவில் அவர் இணைய உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இயக்குநர் குழுவில் இணையப் போவதில்லை என எலன் மஸ்க் அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து ட்விட்டர் இறுவனத் தலைவர் பிரெட் டெய்லருக்கு கடிதம் எழுதிய எலன் மஸ்க், அந்நிறுவனத்தின் மொத்த பங்குகளையும் 41 பில்லியன் டாலருக்கு வாங்கத் தயாராக உள்ளதாக கூறினார். இந்திய ரூபாயில் இதன் மதிப்பு ரூ.3.12 லட்சம் கோடியாகும். ட்விட்டர் தனியார் நிறுவனமாக மாற்றப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ள அவர், தனது கருத்தை பரிசீலனை செய்யாவிட்டால் பங்குதாரராக தனது நிலையையும் மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கும் எனவும் கூறியுள்ளார்.

மேலும் படிக்க | Elon Musk - Twitter: டிவிட்டரை மொத்தமாக வாங்க தயாராகும் எலான் மஸ்க்

எலன் மஸ்க்கின் அறிவிப்பைத் தொடர்ந்து ட்விட்டர் நிறுவனத்தின் பங்குகள் உயர்ந்திருந்தாலும் அங்கு பணியாற்றும் ஊழியர்கள் கலக்கமடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து ஊழியர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் பங்கேற்ற தலைமை செயல் அதிகாரி பராக் அகர்வால், ஊழியர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். 

 ஊழியர்களை கலக்கமடையாமல் வேலையில் கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொண்ட பராக் அகர்வால், நடப்பதை தாங்கள் கவனித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டார். மேலும், இந்த விவகாரத்தில் ஊழியர்கள் பணயக் கைதிகளாக்கப்பட மாட்டார்கள் எனவும் பராக் அகர்வால் உறுதியளித்தார்.

இந்த உரையாடலின்போது, எலன் மஸ்க்கிற்கு இயக்குநர் குழுவில் இடமளிக்க நிறுவனம் எப்படி முன் வந்தது என ஒரு ஊழியர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த பராக் அகர்வால், பங்குதாரர்களின் நலனுக்காக இயக்குநர் குழு செயல்படுவதாகவும், அனைத்து விவரங்களையும் ஊழியர்களிடம் பகிர்ந்துகொள்ள தனக்கு அதிகாரமில்லை எனவும் கூறினார்.

மேலும் படிக்க | ட்விட்டர் இயக்குநர் குழுவில் இணையும் எலன் மஸ்க்

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News