ஐபிஎல் 2022 போட்டிகள் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் நடைபெற்று கொண்டிருக்கிறது. 2020 ஐபிஎல் போட்டிகள் முழுவதும் ஐக்கிய அமீரகத்திலும், 2021-ல் இந்தியாவில் தொடங்கிய ஐபிஎல் 2021 போட்டிகள் பாதியில் கொரோனா தொற்று காரணமாக மீண்டும் ஐக்கிய அமீரகத்திற்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில் மீண்டும் அந்த சூழல் ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மேலும் படிக்க | 2022 உலகக்கோப்பை அணியில் தினேஷ் கார்த்திக்கு இடம் கிடைக்குமா?
புதன்கிழமை பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதும் போட்டி புனேவில் இருந்து மும்பைக்கு மாற்றப்பட்டு பிரபோர்ன் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) இன்று இந்த முடிவை எடுத்துள்ளது. "நீண்ட தூர பயணத்தை குறைப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது" என்று போட்டியின் இடத்தை மாற்றுவதாக பிசிசிஐ செய்திக்குறிப்பு மூலம் அறிவித்தது.
UPDATE:
The #DCvPBKS match scheduled for tomorrow, 20th April, has been shifted to the Brabourne Stadium, Mumbai from MCA Stadium, Pune in light of the recent COVID-19 cases in the camp.The entire contingent will undergo another round of RT-PCR testing on Wednesday morning. pic.twitter.com/EgZojafHLQ
— Delhi Capitals (@DelhiCapitals) April 19, 2022
தற்போது டெல்லி அணியில் உள்ள ஐந்து பேருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்களின் பெயர்களையும் பிசிசிஐ வெளியிட்டுள்ளது. பேட்ரிக் ஃபர்ஹாட் - பிசியோதெரபிஸ்ட், சேத்தன் குமார் - ஸ்போர்ட்ஸ் மசாஜ் தெரபிஸ்ட், மிட்செல் மார்ஷ் - வீரர், டாக்டர் அபிஜித் சால்வி - குழு மருத்துவர் மற்றும் ஆகாஷ் மானே - சமூக ஊடக உள்ளடக்க குழு உறுப்பினர் ஆகியோருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளது.
"கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். கொரோனா சோதனையில் நெகட்டிவ் வந்தால் மட்டுமே மீண்டும் அவர்கள் டெல்லி அணியில் இணைவார்கள் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. டெல்லி கேபிடல்ஸ் குழுவினர் அனைவருக்கும் ஏப்ரல் 20 ஆம் தேதி காலை மற்றொரு RT-PCR சோதனைக்கு உட்படும் என்றும் பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | ஷிவம் துபே செய்த காரியம்! கடுப்பாகி தொப்பியை வீசிய ஜடேஜா!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR