உக்ரைன் மீது ரஷ்யா தொடங்கிய போர் 19-வது நாளாக தொடர்கிறது. ரஷ்ய மீது மேற்கத்திய நாடுகள் பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. நெட்ஃபிளிக்ஸ், டிஸ்னி, சோனி போன்ற பொழுதுபோக்கு நிறுவனங்கள் ரஷ்யாவில் தனது சேவையை நிறுத்தியுள்ளன. சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் வன்முறை மற்றும் வெறுப்பைத் தூண்டும் விதத்திலான பதிவுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷ்யாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அந்நாட்டுக்கு எதிரான வெறுப்புப்பதிவுகளுக்கு  ஃபேஸ்புக் நிறுவனம் தற்காலிக அனுமதி வழங்கியது. ரஷ்ய அதிபர் புடின், ரஷ்ய ராணுவ வீரர்கள், ரஷ்யாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் உலக தலைவர்களுக்கு எதிராக  வெறுப்புப்பதிவுகளை வெளியிட ஃபேஸ்புக் நிறுவனம் தற்காலிகமாக அனுமதி வழங்கியது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | தடாலடியாக நுழைந்த ரஷ்ய வீர்ரகள், விரட்டி அடித்த உக்ரைன் ஜோடி: வைரலான வீடியோ


இதனைத் தொடர்ந்து, ரஷ்ய அதிபர் புடினுக்கு எதிராக பேஸ்புக்கில் பல்வேறு பதிவுகள் வெளியாகின. இதற்கு பதில் நடவடிக்கையாக பேஸ்புக்கிற்கு தடை விதித்து ரஷ்ய அரசு உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து, பேஸ்புக்கின் மற்றொரு சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமிற்கும் தடை விதிக்கப்பட்டது. இந்த தடை இன்று முதல் அமலாகி உள்ளது. இதற்கு இன்ஸ்டாகிராம் தலைவர் ஆதம் மோசரி கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார். இந்த தடையால் 8 கோடி ரஷ்யர்கள் வெளியுலகத் தொடர்பை இழந்து விடுவர் என  ஆதம் மோசரி குறிப்பிட்டுள்ளார்.         
 
இந்த போர் உக்ரைன் - ரஷ்யாவை மட்டுமின்றி உலக நாடுகளையும் பல்வேறு வகையில் பாதித்துள்ள நிலையில்,  ரஷ்யா - உக்ரைன் பிரதிநிதிகள் இடையிலான 4-வது கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெறுகிறது. இதற்கு முன்னர் நடைபெற்ற மூன்று கட்ட பேச்சுவார்த்தைகளும் உடன்பாடு ஏற்படவில்லை. இந்த நிலையில் போர் நிறுத்தம் குறித்து இரு நாட்டு பிரதிநிதிகளும் காணொலி காட்சி வாயிலாக ஆலோசிக்க உள்ளனர். 


மேலும் படிக்க | நீண்ட போருக்கு தயாராகும் ரஷ்யா; தீவிரமடையும் கிவ் மீதான வான் தாக்குதல்கள்!


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR