கடந்த 2014 ஆம் ஆண்டு உக்ரைனின் கிரிமியா பிராந்தியத்தை ரஷ்யா கைப்பற்றியது. அந்த பகுதியை தன் நாட்டுடன் இணைத்துக் கொண்டது. மேலும் கிரிமியா ரஷ்யா நாட்டிற்கு சொந்தமானது எனது அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின் ஆணை பிறப்பித்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இச்சம்பவத்திற்கு உலக நாடுகள் பல ரஷ்யாவுக்கு கண்டனங்கள் மற்றும் எதிர்ப்பு தெரிவித்தனர். கிரிமியா பகுதியைக் குறித்து ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடின் ஆணையை நிராகரித்ததுடன், அந்த ஆணை செல்லாது என்று அறிவித்தது உக்ரைன். 


இதனையடுத்து ரஷ்யா-உக்ரைன் இரு நாடுகளுக்கிடையே தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் கிரிமியா பிராந்தியத்தில் நின்று கொண்டிருந்த உக்ரைன் நாட்டின் மூன்று கடற்படை கப்பல்களை தாக்கி அவற்றை ரஷ்யா கைப்பற்றியுள்ளது. இந்த சம்பவம் இவ்விரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.


ரஷ்யாவின் செயலைக் கண்டித்து, உக்ரைன் நாட்டில் தலைநகரத்தில் உள்ள ரஷ்ய தூதரகத்துக்கு வெளியே உக்ரைன் நாட்டு மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.


இச்சம்பவத்து குறித்து ரஷ்யா, "தங்கள் நாட்டு எல்லைக்குள் சட்டவிரோதமாக உக்ரைன் கப்பல்கள் நுழைந்தால் தான், சிறை பிடித்தோம் என குற்றம் சாட்டியது. அதேபோல ரஷ்யாவின் நடவடிக்கை பைத்தியகாரத்தனமானது என்று உக்ரைன் அதிபர் பெட்ரோ போரோஷென்கோ கூறியுள்ளார்.


இந்த பிரச்சனை தொடர்பாக விவாதிப்பதற்காக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அவசரக் கூட்டம் இன்று மாலை நடைபெற உள்ளது.