ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த 104 நாட்களாக போர் நடந்து வரும் நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் பல நகரங்களில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. இதனுடன் உக்ரைனுக்கு ஆதரவான நாடுகள் மீதும் ரஷ்யா நடவடிக்கை எடுத்து வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரஷ்யா இப்போது அமெரிக்கா மீது மேற்கொண்டுள்ள கடுமையான நடவடிக்கையில் ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் 61 அமெரிக்க  61 அமெரிக்காவின் அரசு அதிகாரிகள் மற்றும் தொழில் அதிபர்கள்  மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளது. 


ரஷ்யாவின்  தடைக்கான காரணம்


"ரஷ்யாவை சேர்ந்த அரசியல், அரசியல் சாராத பிரமுகர்கள் மற்றும் உள்நாட்டு வணிகப் பிரதிநிதிகளுக்கு எதிராக அமெரிக்க பொருளாதாரத் தடைகளை விதித்து வருவதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இத்துடன் மேற்குலக நாடுகளுக்கும் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைனிற்கு தொலைதூர ராக்கெட்டுகளை வழங்கினால், ரஷ்யா பதிலடி கொடுக்கும் என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் லாவ்ரோவ் கூறினார்.


அமெரிக்க அரசு அதிகாரிகள் மீது ரஷ்யாவின் பொருளாதாரத் தடைகள்


ரஷ்யாவின் தடைப் பட்டியலில் அமெரிக்க அரசு நிர்வாகிகள் மற்றும் பெரிய அமெரிக்க நிறுவனங்களின் முன்னாள் மற்றும் தற்போதைய நிர்வாக அதிகாரிகள் ஆகியோர் அடங்குவர். இந்தப் பட்டியலில் நிதி அமைச்சர் ஜேனட் யெல்லன், எரிசக்தி அமைச்சர் ஜெனிஃபர் கிரன்ஹோல்ம், வெள்ளை மாளிகையின் தகவல் தொடர்பு இயக்குநர் கேட் பெடிங்ஃபீல்ட் மற்றும் நெட்ஃபிக்ஸ் தலைமைச் செயல் அதிகாரி (CEO) ரீட் ஹேஸ்டிங்ஸ் போன்றவர்களின் பெயர்கள் உள்ளன.


மேலும் படிக்க | Strychnine: துடிதுடிக்க உயிரைக் கொல்லும் கொடூர விஷம்; எதிரிகளிடம் ரஷ்யா பயன்படுத்தியதா


உக்ரைனுக்கு உதவும் பிரிட்டன் 


ரஷ்யாவுடனான போர் நடந்து வரும் நிலையில், அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகள் உக்ரைனுக்கு உதவியுள்ளன. தற்போது, ​​ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் அச்சுறுத்தலை மீறி, பிரிட்டன் மீண்டும் உக்ரைனுக்கு உதவி அறிவித்துள்ளது. பிரிட்டன் இப்போது உக்ரைனுக்கு M270 ஏவுகணை அமைப்பை வழங்கவுள்ளது.


104 நாட்களாக தொடரும் ரஷ்யா -உக்ரைன் போர் 


பிப்ரவரி 24 அன்று ரஷ்யா உக்ரைன் மீதான தாக்குதலை தொடங்கியது . இரு நாடுகளுக்கு இடையிலான இந்த உலகப் போர் கடந்த 104 நாட்களாக நடந்து வரும் நிலையில், உக்ரைனின் பல நகரங்களில் ரஷ்ய இராணுவ வான்வழித் தாக்குதல்கள் தொடர்கின்றன, அதன் பிறகு உக்ரைனில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. ரஷ்ய தாக்குதலை அடுத்து உக்ரைனின் பல நகரங்கள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளன.


மேலும் படிக்க | உக்ரைன் போரின் தாக்கத்தை உணர்த்தும் மனம் பதற வைக்கும் காட்சிகள்


மேலும் படிக்க |  ரஷ்யா போரில் டால்பின்களை களம் இறக்கியுள்ளதா; அமெரிக்கா வெளியிட்டுள்ள பகீர் தகவல்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR