பிப்ரவரி 24ம் தேதி தொடங்கிய உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் 25 நாட்களுக்கு மேலாக தொடர்ந்துகொண்டுவருகிறது. உக்ரைனின் முக்கிய நகரங்களான கீவ், கார்கிவ், மரியுபோல் உள்ளிட்ட பகுதிகளில் தாக்குதலை ரஷ்ய ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது. உக்ரைன் மீதான போரை உடனடியாக நிறுத்துமாறு ரஷ்யாவுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தும் அதனை பொருட்படுத்தாமல் ரஷ்ய ராணுவம் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உக்ரைன் ராணுவமும் சளைக்காமல் ரஷ்ய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருவதால் இந்த போர் எப்போது தான் முடிவுக்கு வரும் என்பது கணிக்க முடியாததாக மாறியுள்ளது. உக்ரைன் மீதான தாக்குதலுக்கு சிறப்பு ராணுவ நடவடிக்கை என ரஷ்யா பெயர் வைத்திருந்தாலும், நிஜத்தில் இந்த போரின் ரணங்களையும், வலிகளையும் சுமப்பவர்கள் உக்ரைன் குழந்தைகள் தான். 



ரஷ்ய படையிடம் இருந்து தப்பிக்கும் முயற்சியில் குண்டு வீச்சுக்கு ஆளாகி கை, கால்களை இழந்த நிலையில் மருத்துவமனைகளில் சிக்கிசை பெற்று வரும் குழந்தைகளின் புகைப்படங்கள் வெளியாகி காண்போர் நெஞ்சை உலுக்கி வருகின்றன. மரியுபோல் நகரில் ரஷ்ய ராணுவம் நடத்திய இடைவிடாத குண்டுவீச்சு தாக்குதலில் படுகாயம் அடைந்த நூற்றுக்கணக்கான குழந்தைகள் சபோரிஜியாவில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 


இந்நிலையில், உக்ரைனின் டான்பாஸ் மாகாணத்தில் இருந்து 2389 குழந்தைகளை ரஷ்ய ராணுவத்தினர் கடத்தி சென்றுள்ளதாக உக்ரைன் அரசு குற்றம்சாட்டியுள்ளது. இது தொடர்பாக உக்ரைன் வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ரஷ்ய படையெடுப்பில் குழந்தைகள் குறிவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனின் கட்டுப்பாட்டில் உள்ள டான்பாஸ் நகரில் இருந்து குழந்தைகள் சட்டவிரோதமாக நாடு கடத்தப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 


மேலும் படிக்க | அடுத்த கட்டத்துக்கு செல்லும் உக்ரைன் ரஷ்யா விவகாரம்: மழலையர் பள்ளி மீது ஷெல் தாக்குதல்



போரில் உக்ரைனை சேர்ந்த பெற்றோர்களை கொன்று குவிக்கும் ரஷ்ய வீரர்கள் குழந்தைகளை உடனுக்குடன் ரஷ்யாவுக்கு கடத்துவதாக கூறப்படுகிறது. பெற்றோரை இழந்த குழந்தைகள் ரஷ்யாவில் உள்ள காப்பகங்களில் சேர்க்கப்பட்டு வருகின்றனர். கீவ் நகரில் மக்களை கேடயமாக உக்ரைன் ராணுவம் பயன்படுத்துவதால் டான்பாஸ் நகரில் அவ்வாறு நடக்க கூடாது எனும் நோக்கில் ரஷ்ய ராணுவம் இவ்வாறு செய்வதாகவும் கூறப்படுகிறது. 


டான்பாஸ் மாகாணத்தின் ஒரு பகுதி உக்ரைனின் கட்டுப்பாட்டிலும், மற்றொரு பகுதி ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டிலும் உள்ளது. உக்ரைன் மீதான படையெடுப்புக்கு சில தினங்களுக்கு முன் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் வசம் இருந்த டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பகுதிகளை சுதந்திர நகரங்களாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | உக்ரைனில் பள்ளி மீது ராட்சத ஏவுகணை தாக்குதல் - 400 பேரின் கதி என்ன?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR