Nasal Spray Testing in Russia: ரஷ்யா COVID-19 தொற்றுநோய்க்கான நாசல் ஸ்ப்ரேவின் ஆய்வுகளில் முழு மூச்சில் இறங்கியுள்ளது. முக்கில் தெளிக்கப்படும் இந்த நாசல் ஸ்ப்ரே, 8-12 வயது வரையிலான குழந்தைகளுக்கு ஏற்றதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய தடுப்பு மருந்தை வரும் செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்ய ரஷ்யா திட்டமிட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஸ்பூட்னிக் வி- ஐ (Sputnik V) உருவாக்கிய கமலியா நிறுவனத்தின் தலைவர் அலெக்சாண்டர் கின்ட்ஸ்பர்க், குழந்தைகளுக்கான நாசல் ஸ்ப்ரேவில், ஸ்புட்னிக் வி-யில் பயன்படுத்தப்பட்டுள்ள அதே தடுப்பு மருந்துதான் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும், ஊசிக்கு பதிலாக இது மூக்கில் விடப்படும் ஒரு ஸ்ப்ரேவாக இருக்கும் என்றும் கூறியதாக டாஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 


குழந்தைகளுக்கான இந்த தடுப்பு மருந்து, செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதிக்குள் விநியோகத்திற்கு தயாராக இருக்கும் என கூறப்பட்டுள்ளது. சமீபத்தில் அதிபர் விளாடிமிர் புடினுடனான சந்திப்பின் போது ஜின்ட்ஸ்பர்க் இவ்வாறு கூடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


ALSO READ: Sputnik V தடுப்பூசியை தயாரிக்க DCGI அனுமதியை பெற்றது சீரம் நிறுவனம்: தீருமா தடுப்பூசி தட்டுப்பாடு?


தடுப்பு மருந்துக்கான (Vaccine) ஆராய்ச்சி குழு எட்டு முதல் 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பு மருந்துக்கான பரிசோதனையை செய்தது. இந்த குழந்தைகளில் யாருக்கும் எந்தவிதமான பக்க விளைவுகளும் ஏற்படவில்லை. உடல் வெப்ப நிலையிலும் எந்த அதிகரிப்பும் இல்லை என்று ஜின்ட்ஸ்பர்க் தெரிவித்ததாக டாஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. 


"நாங்கள் குழந்தைகளுக்கு நாசல் ஸ்ப்ரேவை அளித்து வருகிறோம். அதே மருந்தை நாசி மூலம் ஸ்ப்ரேவாக செலுத்தி வருகிறோம்" என்று கின்ட்ஸ்பர்க் கூறினார்.


இதற்கிடையில், டெல்லியின் இந்திரபிரஸ்தா அப்பல்லோ மருத்துவமனையில் டாக்டர் ரெட்டிஸ் ஆய்வகத்தின் ஊழியர்களுக்கு ரஷ்யாவின் கோவிட் -19 (COVID-19) தடுப்பூசியான ஸ்பூட்னிக் வி தடுப்பூசி செலுத்தப்பட்டது என வட்டாரங்கள் தெரிவித்தன.


அடுத்த வாரம் முதல் டெல்லியில் உள்ள இந்திரபிரஸ்தா அப்பல்லோ மருத்துவமனையில் ஸ்பூட்னிக் வி கிடைக்க வாய்ப்புள்ளது.


ALSO READ: Sputnik V தடுப்பூசி மருந்து உற்பத்தி இந்தியாவில் தொடங்கியது


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR