பாரத் பயோடெக்கின் கோவிட் -19 தடுப்பூசி, கோவாக்சினை மருத்துவ பரிசோதனைகளுக்காக திங்கள்கிழமை (ஜூன் 7, 2021) முதல், குழந்தைகளுக்கு செலுத்தும் நடவடிக்கை தொடங்கும் என்று செய்தி நிறுவனம் ஏ.என்.ஐ தகவல் வெளியிட்டுள்ளது.
எய்ட்ஸ் பாட்னாவில் 12 முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு, பரிசோதனைக்காக கோவேக்ஸின் செலுத்தும் நடவடிக்கை நேற்று தொடங்கிய நிலையில், இன்று, தில்லி எய்ம்ஸில் தொடங்கியுள்ளது.
இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஜெனரல் (DCGI) மே 11 அன்று குழந்தைகளுக்கு செலுத்தி மருத்துவ பரிசோதனைகளை நடத்த பாரத் பயோடெக்கிற்கு ஒப்புதல் அளித்தது.
முன்னதாக, நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதார பிரிவு) வி.கே. பால், “2 முதல் 18 வயதுக்குட்பட்ட இரண்டாம் நிலை / மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனைகளுக்கு கோவாக்சின் இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஜெனரல் (DCGI) ஒப்புதல் அளித்துள்ளது” என்று கூறியிருந்தார்.
ALSO READ | Covaxin Vs Covishield: ஆய்வில் வெளியான ஆச்சர்ய தகவல்கள்
இந்தியாவில் தற்போது மூன்று COVID-19 தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. பாரத் பயோடெக்கின் கோவாக்சின் (Covaxin), சீரம் இன்ஸ்டிடியூட்டின் கோவிஷீல்ட் (Covishield) மற்றும் ரஷ்யாவின் ஸ்பூட்னிக் வி (Sputnik V) ஆகியவை மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) உடன் இணைந்து கோவாக்சின் பாரத் பயோடெக் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டு வருகிறது, மேலும் தற்போது நடைபெற்று வரும் கோவிட் -19 தடுப்பூசி இயக்கத்தில் பெரியவர்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.
இதற்கிடையில், சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் தரவுகளின்படி, இந்தியா ஞாயிற்றுக்கிழமை COVID-19 பாதிப்புகள் கடந்த 2 மாதங்களில் மிக குறைந்த அளவு பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், சுமார் 1.1 லட்சம் புதிய தொற்று பாதிப்புகள் பதிவாகியுள்ளது. இந்தியாவில் சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 14,09,648 ஆக குறைந்துள்ளது.
ALSO READ | மாம்பழம் சாப்பிட்ட பின் எடுத்துக் கொள்ளக் கூடாத 5 உணவுகள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR