ரஷ்யா உக்ரைன் போர்; தொடரும் ரஷ்ய தொழிலதிபர்களின் மர்ம மரணங்கள்!
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே போர் மூண்டு 6 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், சில முக்கிய ரஷ்ய டஅதிபர்களின் மர்மமான மரணமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்ய தொழிலதிபர்கள் மரணத்தில் மர்மம்: ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே நடந்து வரும் மோதலுக்கு மத்தியில், இரு நாடுகளின் பொருளாதாரமும் பெரும் பாதிப்பை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் மற்றொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த ஆண்டு ஜனவரி மாத இறுதியில் இருந்து, ரஷ்யாவின் குறைந்தது 8 முக்கிய ரஷ்ய தொழிலதிபர்கள் மற்றும் வணிகர்கள் மர்மமான சூழ்நிலையில் இறந்துள்ளனர்.
தொழிலதிபர்களின் மரணம்
இந்த அனைத்து தொழிலதிபர்களின் மரணத்திற்கும் பொதுவான தொடர்பு உள்ளதா என்பது குறித்து ரஷ்யாவில் இருந்து மேற்கத்திய நாடுகள் வரை விவாதம் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையில், ராய்ட்டர்ஸ் அறிக்கையில் வெளியான தகவல்களில், இந்த வணிகர்களில் நான்கு பேர் கேஸ்பிரோம் அல்லது அதன் துணை நிறுவனங்களுடன் தொடர்புடையவர்கள் என கூறப்படுகிறது. அதே நேரத்தில், இருவர் ரஷ்யாவின் இரண்டாவது பெரிய எண்ணெய் உற்பத்தியாளரான லுகோயில் நிறுவனத்துடன் தொடர்புடையவர்கள். இந்த நிலையில், லுகோயில் நிறுவன தலைவர் ரவில் மகனோவ், மருத்துவமனையின் ஜன்னலில் இருந்து விழுந்து சமீபத்தில் இறந்தார்.
1. லியோனிட் ஷுல்மேன் - 60 வயதான ஷுல்மன் காஸ்ப்ரோம் இன்வெஸ்ட் நிறுவனத்தில் போக்குவரத்துத் துறை தலைவராகப் பணிபுரிந்தார். செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கின் வடக்குப் பகுதியில் உள்ள வைபோர்க்ஸ்கி டவுனில் உள்ள ஒரு மாளிகையின் குளியலறையில் ஜனவரி 30 அன்று அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டதாக உள்ளூர் செய்தி நிறுவனம் கூறுகிறது. அவரது மரணம் தற்கொலையாக கருதப்படுகிறது. அதே நேரத்தில், காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஷுல்மன் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும், இதன் காரணமாக அவர் விடுப்பில் இருப்பதாகவும் உள்ளூர் செய்தி இணையதளம் ஒன்று தெரிவித்துள்ளது.
2. அலெக்சாண்டர் ட்யூலகோவ் - அலெக்சாண்டர், 61, பிப்ரவரி 25 அன்று அவரது செயின்ட் பீட்டர்ஸ்பர்க் வீட்டின் கேரேஜில் இறந்து கிடந்தார். இதற்கு சில மணி நேரங்களுக்கு முன், உக்ரைன் மீது மாஸ்கோ ராணுவம் நடத்திய தாக்குதல் குறித்த தகவலை ரஷ்ய ஊடகங்கள் உலகத்துடன் பகிர்ந்தன.
மேலும் படிக்க | ரஷ்யா-உக்ரைன் போரினால் சிக்கலில் Zaporizhia அணுஆலை; IAEA கூறுவது என்ன!
3. மிகைல் வாட்போர்ட் - உக்ரைனில் பிறந்த தொழிலதிபர் வாட்போர்ட், வயது 66, பிப்ரவரி 28 அன்று தென்கிழக்கு இங்கிலாந்தில் உள்ள அவரது மாளிகை ஒன்றில் இறந்து கிடந்தார் என்று காவல்துறையை மேற்கோள் காட்டி உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன. ரஷ்யா - உக்ரைன் போர் தொடங்கிய பிறகு வாட்ஃபோர்டின் மரணச் செய்தியும் வந்தது.
4. விளாடிஸ்லாவ் அவாயேவ் - ரஷ்ய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில், 51 வயதான அவாயேவ், கேஸ்பிரோம்பேங்க் நிறுவனத்தின் முன்னாள் துணைத் தலைவராக இருந்தார். ஏப்ரல் 18 அன்று, அவர் தனது மனைவி மற்றும் மகளின் உடல்களுடன் மாஸ்கோ குடியிருப்பில் இறந்து கிடந்தார்.
5. செர்கி பிரோடோசென்யா - 55 வயதான செர்கி பிரோடோசென்யா, ரஷ்யாவின் மிகப்பெரிய திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு உற்பத்தியாளரான நோவாடெக் நிறுவனத்தின் முன்னாள் உயர் மேலாளர், ஏப்ரல் 19 அன்று ஸ்பெயினில் உள்ள ஒரு வில்லாவில் தனது மனைவி மற்றும் மகளுடன் இறந்து கிடந்தார்.
மேலும் படிக்க | Quaternary Twins: அமெரிக்காவின் ‘மரபணு’ சகோதரர்கள்; வியக்கும் விஞ்ஞானிகள்!
6. விளாடிமிர் லிகிஷேவ் - ரஷ்ய ஊடக நிறுவனமான ஆர்பிசி வெளியிட்டுள்ள அறிக்கையில், 45 வயதான விளாடிமிர் ஒரு உணவக சங்கிலி வணிகத்துடன் தொடர்புடையவர், அவர் ஒரு பிரபலமான கட்டிடத்தின் 16 வது மாடியில் அமைந்துள்ள தனது வீட்டின் பால்கனியில் இறந்து கிடந்தார்.
7. யூரி வோரோனோவ் - யூரி வோரோனோவ், தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் அஸ்ட்ரா-ஷிப்பிங்கின் நிறுவனர், லெனின்கிராட்டில் உள்ள ஒரு குடிசை வளாகத்தின் நீச்சல் குளத்தில் இறந்து கிடந்தார். அவரது தலையில் குண்டு காயத்தின் தழும்பு இருந்தது. அவரது சடலத்தின் அருகே கைத்துப்பாக்கி ஒன்று கிடந்தது.
8. ராவில் மேகானோவ் - ராவில் மேகானோவ், வயது 67, ரஷ்ய எண்ணெய் உற்பத்தி நிறுவனமான லூகோயில் நிறுவனத்துடன் தொடர்புடையவர். மாஸ்கோவில் உள்ள மருத்துவமனை ஒன்றின் ஜன்னலில் இருந்து கீழே விழுந்து கடந்த வியாழன் அன்று ரவில் உயிரிழந்தார்.
கடந்த 6 மாதங்களில், இந்த ரஷ்ய பிரபலங்களின் சந்தேகத்திற்கிடமான மரணம் குறித்து நிறைய ஊகங்கள் வெளிவருகின்றன என்பது தெளிவாகிறது. உக்ரைன் மீதான தாக்குதலால் ரஷ்யாவின் வர்த்தக உலக மக்கள் மகிழ்ச்சியடையவில்லை என மேற்கத்திய நாடுகளின் ஊடகச் செய்திகளில் நீண்டகாலமாக கூறப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. போர் ஏற்பட்டால் இங்குள்ள தொழிலதிபர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது வெளிப்படையான விஷயம் தான். ரஷ்ய ஏஜென்சிகள் கூடுதல் தகவல்களை வழங்க மறுத்துவிட்டன.
மேலும் படிக்க | Viral News: தன்னை கடித்த பாம்பை கடித்து குதறிய 2 வயது சிறுமி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ