கோவிட் -19 தடுப்பு மருந்து (COVID-19 Vaccine) பற்றிய ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. ரஷ்ய சுகாதார அமைச்சகம் செவ்வாயன்று COVID-19 தடுப்பு மருந்தான ஸ்பூட்னிக் -5 (Sputnik-5) இன் முதல் தொகுதி உற்பத்தியை ரஷ்யா பூர்த்தி செய்துள்ளது என்றும் இந்த தடுப்பு மருந்து விரைவில் ரஷ்ய பிராந்தியங்களில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மறுபுறம், இந்தியாவிலும் மக்களுக்கு விரைவில் COVID-19 தடுப்பு மருந்து வழங்கப்படும். நல்ல செய்தி என்னவென்றால், பாரத் பயோடெக்கின் (Bharat biotech) தடுப்பு மருந்தான கோவாக்சினுக்கு (Covaxin) இரண்டாவது சுற்றில், மனிதர்கள் மீது சோதனை செய்வதற்கான அனுமதி கிடைத்துள்ளது.


அதன் சோதனைகளும், இன்று, அதாவது, செவ்வாய்க்கிழமை முதல் தொடங்குகிறது.


பி.டி.ஐ செய்தியின்படி, ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றுநோயைத் தடுப்பதற்கான முதல் தொகுதி தடுப்பூசிகளான காம்-கோவிட்-வேக் (ஸ்பூட்னிக் -5), கமாலய ஆராய்ச்சி நிறுவனம் தொற்றுநோயியல் மற்றும் நுண்ணுயிரியல் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. அதன் பிறகு இந்த தடுப்பூசியை குடிமக்களிடையே விநியோகிக்க தயாரிக்கப்பட்டது.


ALSO READ: நற்செய்தி... கொரோனா தடுப்பூசி இந்த வாரம் முதல் பொதுமக்களுக்கு கிடைக்கும்..!


வரும் நாட்களில் சில பகுதிகளில் முதல் தொகுதி தடுப்பு மருந்து வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. ரஷ்ய சுகாதார அமைச்சர் மிகைல் முராஷ்கோ முன்னதாக ஆசிரியர்கள் மற்றும் மருத்துவர்கள் போன்ற முதல் முன்னணி வீரர்களுக்கு தடுப்பு மருந்து வழங்கப்படும் என்று கூறியிருந்தார். இந்த மாத தொடக்கத்தில் தி லான்செட் ஜர்னலில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், ரஷ்ய COVID-19  தடுப்பு மருந்து கடுமையான பக்க விளைவுகளைக் காட்டவில்லை என்றும் ஆரம்பகால மனித சோதனைகளில் நோயெதிர்ப்பு சக்தியைக் காட்டியது என்றும் கூறப்பட்டது.


ரஷ்யா (Russia) கடந்த மாதம் 'ஸ்பூட்னிக் -5' –ஐ பதிவுசெய்தது. இதன் மூலம் கோவிட் -19 தடுப்புமருந்துக்கு ஒப்புதல் அளித்த உலகின் முதல் நாடானது ரஷ்யா. ஆகஸ்ட் 15 அன்று, ரஷ்ய சுகாதார அமைச்சகம் தடுப்பு மருந்து உற்பத்தியைத் தொடங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டது.


ஸ்பூட்னிக் -5 (Sputnik-5) தடுப்பு மருந்து குறித்து புது தில்லியும் மாஸ்கோவும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக இந்திய அரசு கடந்த மாத இறுதியில் கூறியிருந்தது. அதே நேரத்தில், ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கிரில் டிமிட்ரிஜ், கோவிட் -19 தடுப்பு மருந்து உற்பத்திக்கு இந்தியாவுடன் கூட்டு சேர ரஷ்யா விரும்புகிறது என்று கூறினார்.


ALSO READ: மக்களுக்கு ஒரு நற்செய்தி... Covaxin இரண்டாம் கட்ட சோதனைக்கு ஒப்புதல்!!