ரஷ்யா-உக்ரைன் போர்: உக்ரைனுடான போருக்கு மத்தியில், தானிய ஒப்பந்தம் மேற்கொண்ட சில மணிநேரங்களிலேயே ரஷ்யா ஏவுகணைத் தாக்குதலை நடத்தியது தானிய ஒப்பந்தம் தொடர்பான ரஷ்யாவின் அலட்சியப்போக்கை காட்டுவதாக அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. உக்ரைனில் உள்ள ஒடேசா துறைமுகத்தில் ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்கா, இரு நாடுகளும் தானிய ஏற்றுமதி பற்றிய புரிதலை எட்ட முடிந்த நிலையில், அதை தொடர்வதே உலகத்திற்கு நல்லது என்று கவலை கலந்த எச்சரிக்கை விடுத்துள்ளது. ஒப்பந்தம் தொடர்பான நிம்மதியை உலகம் அனுபவிப்பதைக்கூட ரஷ்யா விட்டு வைக்கவில்லை என்று உக்ரைன் மக்கள் கவலை கொள்கின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வெள்ளிக்கிழமையன்று (ஜூலை 22) கருங்கடல் பகுதியில் இருந்து தானியங்களை ஏற்றுமதி செய்வது தொடர்பான ஒப்பந்தத்தில் ரஷ்யாவும் உக்ரைனும் கையெழுத்திட்ட பிறகு, சனிக்கிழமையன்று உக்ரைனின் ஒடெசாவில் உள்ள துறைமுகத்தை ரஷ்யா குறிவைத்ததாக உக்ரைன் குற்றம் சாட்டியது.


மேலும் படிக்க | Volodymyr Zelensky: உக்ரைனிடம் 10 பில்லியன் டாலர் மதிப்புள்ள தானியங்கள் இருப்பு


ஒப்பந்தத்தின் படி, கருங்கடலில் உள்ள மூன்று முக்கிய துறைமுகங்களான ஒடேசா, செர்னோமோர்ஸ்க் மற்றும் யுஷ்னி ஆகியவற்றிலிருந்து கணிசமான அளவு வணிக உணவு மற்றும் உர ஏற்றுமதிகள் செய்யலாம். அதற்கு ரஷ்யா எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.


ஆனால், ஒப்பந்தத்தை மீறிய ரஷ்யாவுக்கு ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கை தலைவர் ஜோசப் பொரெல் ஆகியோரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


உக்ரைனின் கருங்கடல் வழியிலான தானிய ஏற்றுமதியைத் தடுக்கவும், உலகளாவிய உணவு நெருக்கடியைத் தணிக்கவும் உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே ஒரு தானிய ஒப்பந்தத்திற்கு உத்தரவாதம் அளிக்க ஐ.நா. பொறுப்பு ஏற்றுக் கொண்டுள்ளதாக  உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்திருந்தார்.  


மேலும் படிக்க | Russia Ukraine Crisis: போர்க்களத்தில் மலரும் தானிய ஏற்றுமதி ஒப்பந்தம்


இருப்பினும், இதுவரை, உக்ரைன் துறைமுகத்தில் இதுவரை எந்த தாக்குதலையும் நடத்தவில்லை என்று ரஷ்யா மறுத்துள்ளது. உக்ரைன் நாடாளுமன்ற உறுப்பினர் Oleksiy Honcharenko தெரிவித்த தகவல்களின்படி, ஒடெசா நகர் பல வெடிப்புகளால் பாதிக்கப்பட்டது, அங்குள்ள துறைமுகமும் சேதம் அடைந்தது.


இரு நாடுகளும் ஒப்புக்கொண்ட ஒப்பந்தத்தின்படி, உக்ரைனில் உள்ள துறைமுகங்கள் அல்லது தானியங்களை ஏற்றிச் செல்லும் கப்பல்களை குறிவைக்கமாடோம் என்று ரஷ்யா உறுதியளித்தது. ஆனால் ரஷ்யா புரிந்துணர்வை மதிக்கவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் குற்றம் சாட்டியுள்ளார்.


ஒருபுறம் ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் நிலையில் மறுபுறம் ஏவுகணைகளை ரஷ்யா இயக்குகிறது என்றும், எனவே, எங்களுக்கு விமானங்கள் தேவை, மேலும் ரஷ்ய கூட்டமைப்பின் முழு கருங்கடல் கடற்படையையும் மூழ்கடிக்க வேண்டும். இது தானிய ஏற்றுமதிக்கான சிறந்த ஏற்பாடாக இருக்கும்" என்று அவர் சமூக ஊடகமான டெலிகிராம் செயலியில் பதிவிட்டார்.


மேலும் படிக்க | சீன அடிப்படையிலான இஸ்லாமியர்களாக இருப்பது எப்படி: முஸ்லிம்களின் கேள்வி


உக்ரைனில் ஏற்பட்டுள்ள நெருக்கடி, சர்வதேச உணவு தானியங்களின் விநியோகச் சங்கிலியை கடுமையாக பாதித்துள்ளது, உலக தானிய ஏற்றுமதியில் முன்னிலை வகிக்கும் உக்ரைனில் நடைபெற்று வரும் போரால், உணவு விநியோகம் பாதிக்கப்பட்டு,  உலகெங்கிலும் பல பிரச்சனைகளை ஏற்படுத்தியுள்ளது.


இதன் விளைவாக, துருக்கியின் மத்தியஸ்தில் ஏற்பட்ட உணவு தானிய ஒப்பந்தம் வரவேற்கத்தக்க நடவடிக்கையாகக் காணப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபையும் இந்த முன்னேற்றத்தை "நம்பிக்கையின் கலங்கரை விளக்கம்" என்று பாராட்டியது. ஆனால், ஒடெசா மீதான தாக்குதல்கள் ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையில் மீண்டும் பதட்டங்களை அதிகரித்துள்ளன.


ரஷ்யா மீது உலக நாடுகளின் அதிருப்தி அதிகரித்து வரும் நிலையில், ரஷ்யாவின் தாக்குதல் நிலைமையை மேலும் மோசமாக்கும் என்று நம்பப்படுகிறது.


மேலும் படிக்க | ரஷ்யாவுக்கு ட்ரோன்களை வழங்க ஈரான் திட்டமிட்டுள்ளதா: அமெரிக்கா


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ